Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

19 வயசு முதல் 41 வயசு வரை மொத்தம் 5 ஆண்கள்.. கூட்டாக நடந்த கொடுமை.. 9ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    9-ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் ! மொத்தம் 5 ஆண்கள் !

    நாகை: பள்ளியில் திடீரென 14 வயது 9ம் வகுப்பு மாணவி திடீரென மயக்கம் போட்டு விழும்போது, இப்படி ஒரு அதிர்ச்சியை ஆசிரியர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், மாணவியை பரிசோதித்த மருத்துவர் அந்த வார்த்தையை சொன்னபோது மொத்த பள்ளியும் அதிர்ந்து போனது.

    9ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் என்று சொன்னால் யார்தான் அதிர்ச்சியடைய மாட்டார்கள். ஆனால் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த துப்புரவு தொழிலாளி தம்பதியினர் மகளுக்குத்தான் இந்த கொடுமை நேர்ந்துள்ளது.

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஒரு தனியார் விடுதி அருகில் இந்த தம்பதி வசிக்கிறார்கள். வேளாங்கண்ணி பேரூராட்சியில் இவர்களுக்கு துப்புரவு பணியாளர் வேலை. தங்கள் மகளாவது நன்கு படித்து வேறு தொழிலுக்கு செல்லட்டும் என்ற எண்ணத்தில், இந்த தம்பதியினர், தங்களின் 14 வயது மகளை, புதுச்சேரி விடுதியில் தங்கி, அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்க வைத்தனர். அந்த சிறுமியும், 9ம் வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளி விடுமுறை

    பள்ளி விடுமுறை

    எல்லாமே நல்லாகத்தான் போனது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறைக்காக வேளாங்கண்ணியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார் சிறுமி. ஏப்ரல், மே இரு மாதங்களும் விடுமுறை என்பதால், தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். ஆனால் பெற்றோர் பகல் நேரத்தில் வேலைக்காக வெளியே சென்றுவிடுவார்கள்.

    டிவி பார்க்க போன சிறுமி

    டிவி பார்க்க போன சிறுமி

    சிறுமிக்கு போர் அடிக்கும் என்பதால், அருகேயுள்ள தாஸ் (41) என்பவர் வீட்டுக்கு டிவி பார்க்க செல்வது வழக்கமாம். அங்கு, அதே பகுதியை சேர்ந்த சூர்யா (20) என்ற வாலிபரும் அங்கே வருவாராம். அவர் நைசாக சிறுமியிடம் பேச்சு கொடுத்து காதல் வலை வீசியுள்ளார். பிறகு, பல இடங்களுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    5 பேர் அட்டகாசம்

    5 பேர் அட்டகாசம்

    இத்தோடு நிற்கவில்லை சூர்யா. தனது நண்பர்களிடமும் கூறி பெருமை பேசியுள்ளார். இதை கேட்ட சூர்யாவின் நண்பர்கள் ரூபன் காரல் மார்க்ஸ்(22), கோகுல் (19), வீரையன்(19) ஆகியோருக்கும் சபலம் தட்டியது. அவர்களும் அந்த மாணவியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர். இதை சூர்யாவிடம் கூறியுள்ளனர். இதை சூர்யாவும் ஏற்று, அந்த மாணவியை மிரட்டி வரவழைத்துள்ளார். பல நாட்களாக இவர்கள் நான்கு பேரும், அந்த மாணவியை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வி‌ஷயம் தாசுக்கு எப்படியோ தெரியவந்துள்ளது. அவருக்கும் சபலம் தட்டியுள்ளது. இதனால் அவரும் இந்த 4 வாலிபர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மயக்கம்

    மயக்கம்

    மாணவியை ஒரு மாதமாக சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம், கூட்டிச் சென்று, 5 பேரும் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே பள்ளி விடுமுறை முடிந்ததால் மாணவியை, அவர் பெற்றோர், புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் பள்ளியில் மாணவி திடீரென மயக்கம் போட்டு கீழே விழ, இத்தனை விஷயமும் அம்பலமானது.

    போக்சோ சட்டம்

    போக்சோ சட்டம்

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் நாகை மாவட்ட போலீஸ் எஸ்.பி செல்வநாகரத்தினத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் தனிப்படை அமைக்கப்பட்டு மாணவியிடம் ரகசியமாக விசாரணை நடந்தது. இதையடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சூர்யா, ரூபன் காரல் மார்க்ஸ், கோகுல், வீரையன், தாஸ் ஆகிய 5 பேரை அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+