மாட்டுக்கறி சாப்பிட்டா வெட்டுவாங்களா.. தாக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக வைரலாகும் ஹேஷ்டேக்!
நாகை: மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. "எனது உணவு எனது உரிமை" என்று பலரும் மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு ஆதரவாக பதிவிட்டு வருவது வைரலாகி வருகிறது.
மாட்டு இறைச்சி சாப்பிட்ட இளைஞரை 20 கொண்ட கும்பல் தாக்கி உள்ள சம்பவம் நாகை மட்டுமில்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது பைசான் என்பவர், கல்பாக்கம் பகுதிக்கு 3 தினங்களுக்கு முன்பு வந்திருந்தார்.
செருப்பால் அடிச்சிக்கிட்டார் முகிலன்.. புகார் தந்த பெண்.. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படலாமா.. மனைவி

பீஃப் சூப்
அப்போது அங்கே ஒரு கடையில் மாட்டு இறைச்சி சூப் குடித்துள்ளார். சூப் குடிப்பதை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டு விட்டார். அதனுடன், "ஆயிரம் தான் சொல்லு.. மாட்டுக்கறி.. மாட்டுக்கறிதான்யா" என்ற வாசகத்தையும் போட்டுவிட்டார். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்துவிட்டார்.

தாக்குதல்
முகம்மது பீஃப் சூப் குடிக்கும் போட்டோவை அவரது பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பார்த்து அதிர்ச்சி ஆனதுடன் முகம்மதுவின் வீட்டுக்குள் நுழைந்து, கத்தியாலும், இரும்பு கம்பியாலும் ஆவேசமாக தாக்கினர். இதில் முகம்மது ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த முகம்மதுவை அப்பகுதி மக்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

4 பேர் கைது
இதனிடையே வன்முறையில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மாட்டிறைச்சி சாப்பிடுவதால், வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த தாக்குதல்கள், இப்போது நம்ம மாநிலத்திலும் நுழைந்துவிட்டது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பீஃப் சாப்பிட்டது ஒரு தப்பா என்று பலர் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.

வைரல்
மேலும், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. #Beef4life, #WeLoveBeef, #BeefForLife என்ற பெயரில் இந்த ஹேஷ்டேக்குகள் வைரலாகிறது. "எனது உணவு எனது உரிமை" என்று பலரும் மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு நேர் எதிராக, விலங்குகளை நேசிப்பவர்கள் மாட்டுக்கறியை சாப்பிட மாட்டார்கள் என்றும் எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.