பெட்ரோல் பங்க் பாத்ரூமில் தனிமையில் காதல் ஜோடி .. சுற்றி வளைத்த ஊழியர்கள்.. நாகர்கோவிலில் பரபரப்பு
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலைய கழிவறைக்குள் புகுந்து தனிமையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடியை, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சுற்றி வளைத்தனர். உடனே அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பெட்ரோல் பங்க் கழிவறையில் இப்படியும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்றால் சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். காதல் ஜோடி உள்ளே புகுந்து ஜாலியாக உல்லாசம் அனுபவித்திருக்கிறது. ஊழியர்கள் சத்தம் போட்டதும் அறைகுறை ஆடையுடன் வெளியே வந்த அவர்கள், மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கருங்கல் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த திங்கள் அன்று மாலை , கேரள பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் 23 வயதுடைய ஒரு இளைஞர்ர, தனது காதலியுடன் சென்று கொண்டிருந்தார். அந்த இளம்பெண் வாலிபரை கட்டி அணைத்தபடி பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் மார்த்தாண்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வாகனத்தை நிறுத்தினர். பின்னர் இருவரும் கீழே இறங்கியுள்ளனர்.
அந்த இளம்பெண் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் ஒருவரிடம் சென்று, கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டார். அந்த பெண் ஊழியரும் அவரை அனுமதித்தார். தொடர்ந்து முதலில் இளம்பெண் கழிவறைக்குள் சென்றார். அந்த இளைஞர் கழிவறைக்கு வெளியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்.
பின்னர் உள்ளே சென்ற இளம்பெண் சிறிது நேரம் கடந்து கதவை மெதுவாக திறந்து வெளியே நின்றுக்கொண்டிருந்த இளைஞரைர உள்ளே வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த இளைஞர் அவசர அவசரமாக கழிவறைக்குள் புகுந்தார். அவர்கள் கழிவறை கதவை பூட்டிக்கொண்டனர். இதை பார்த்த பெண் ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என பெண் ஊழியர் கவனிக்க தொடங்கினார்.
தொடர்ந்து 15 நிமிடமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெண் ஊழியர் கழிவறை அருகே சென்று கதவை தட்டி திறக்குமாறு கூறினார். ஆனால், அவர்கள் கதவை திறக்கவில்லை. எனவே அவர் சத்தம் போட்டு சக ஊழியர்களை அழைத்தார். உடனடியாக பிற ஊழியர்களும் அங்கே வந்தார்கள். அப்போது அவர்களும் கதவை திறக்குமாறு சத்தம் போட்டனர். ஆனால் காதலர்கள் வெளியே வராமல் உள்ளே உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறதுத. ஊழியர்கள் விடாமல் கழிவறையை சூழ்ந்து நின்று கொண்டு காதல் ஜோடியை வெளியே வருமாறு குரல் எழுப்பினார்கள்.
தொடர்ந்து சத்தம் போட்டதால் அந்த ஜோடி பயந்து போய், வேறு வழியில்லாமல் இருவரும் வேர்க்க விறு விறுக்க அரைகுறை ஆடைகளுடன் வெளியே வந்தனர். உடனே அங்கு நின்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர். இதுகுறித்து ஊழியர்கள் மார்த்தாண்டம் போலீசுக்கு தகலும் கொடுத்தனர்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த காதலர்கள் இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கே போட்டுவிட்டு நைசாக தப்பி ஓடிவிட்டனர். அதன்பின்னரே போலீசார் அங்கு வந்தனர். காதலர்கள் இருவரும் தப்பிச்சென்ற நிலையில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அந்த வாகனம் கேரள பதிவு எண் என்பதால், அந்த ஜோடி கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மார்த்தாண்டத்தில் பெட்ரோல் நிலைய கழிவறைக்குள் புகுந்து காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications