நாமக்கல்லில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி! ரூ 20 லட்சம் இழப்பீடு!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ரோகித், அங்குள்ள பாதாள சாக்கடையில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 4ஆவது வார்டு பகுதி சின்னமுதலைபட்டி. இங்கு கடக்கால் வீதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ரோகித் (4). புத்தாண்டு தினமான நேற்று ரோகித், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே புதிதாக பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி குழியில் நிரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருந்தது. விளையாடிக் கொண்டே சென்ற ரோகித், அந்த குழியில் விழுந்து நீரில் மூழ்கினான்.
இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாமல் அக்கம்பக்கத்தில் பெற்றோர் தேடினர். அப்போது அவர்கள் வீட்டருகே குழந்தை இறந்த நிலையில் மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அப்போது குழந்தையை கட்டி பிடித்து பெற்றோர் அழுதது காண்போரை கலங்கச் செய்தது. இந்த குழியை குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் தோண்டியது தெரியவந்தது. குழியை தோண்டிய நிலையில் அதை சுற்றி எந்த பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்படாதது குறித்து அப்பகுதியினர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் அந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இது குறித்து போராட்டம் நடத்திய நிலையில் போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தையின் இழப்புக்கு ரூ 20 லட்சம் இழப்பீடு அளித்தனர்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications