"இப்படி நடந்ததே இல்லை".. ஆர்க்டிக் பகுதியில் அடுத்தடுத்து மின்னல்.. குழம்பிய விஞ்ஞானிகள்.. என்னாச்சு
நியூயார்க்: சர்வதேச அளவில் மிக மிக அரிதாக நடக்க கூடிய ஒரு இயற்கை நிகழ்வு கடந்த சில காலமாக அதிகமாக நடந்து வருகிறது. உலகம் முழுக்க இருக்கும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுசூழல் வல்லுனர்களை இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
காலநிலை மாற்றம் குறித்து உலகம் முழுக்க அச்சம் எழுந்துள்ளது. பல்வேறு நாடுகளில் வெள்ளம், கடுமையான மழை, துருவ பகுதிகளில் ஐஸ் உருகி கடல் மட்டம் உயர்வது, மின்னல் தாக்கி வடமாநிலங்களில் மக்கள் உயிர் இழப்பது என்று காலநிலை மாற்றம் காரணமாக அடுத்தடுத்து துர்சம்பவங்கள் நடக்க தொடங்கிவிட்டன.
கொரோனா வைரஸ் வெளிப்படையாக மக்களை தாக்கி வரும் நிலையில் காலநிலை மாற்றம் சத்தமே இன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாகவே ஆர்க்டிக் பகுதியில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஆர்க்டிக்
ஆர்க்டிக் பகுதியில் சைபீரியாவில் இருந்து வடக்கு அலாஸ்கா வரை கடந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து மூன்று முறை மின்னல் தாக்கி உள்ளது. மின்னல் தானே? இதில் என்ன இருக்கிறது? நம்ம ஊரில்தான் மழை பெய்யும் போதெல்லாம் மின்னல் தாக்குமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆர்க்டிக் பகுதியில் மின்னல் தாக்குவது என்பது காலநிலை மாற்றத்தின் ஆபத்தான அறிகுறி என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

என்ன நடந்தது
ஆர்க்டிக் போன்ற பனி பகுதிகளில் மின்னல், இடி ஏற்படாது. இதற்கு காரணம் ஆர்க்டிக் பகுதியில் தண்ணீர் கீழே இருக்கும். இதை முழுக்க முழுக்க பனி மூடி இருக்கும். இதனால் மேல்மட்டத்தில் போதிய வெப்பநிலை இருக்காது. குறைவான வெப்பநிலை காரணமாக மின்னல் சுத்தமாக ஏற்படாது. ஆர்க்டிக் பகுதியில் மின்னல் ஏற்படுவது என்பது மிக மிக அரிதான சூழலியல் நிகழ்வு.

மின்னல் ஏற்பட்டது
இந்த நிலையில்தான் சைபீரியா தொடங்கி வடக்கு அலாஸ்க்கா வரை பல ஆர்க்டிக் பகுதிகளில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மின்னல் ஏற்பட்டுள்ளது. இங்கு இருக்கும் பனிப்பகுதிகள் உருகி தண்ணீர் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. இதனால் அங்கு லேசாக வெப்பநிலை உயர்ந்து, தண்ணீரின் ஆவியை மேலே அனுப்பி உள்ளது. இதெல்லாம் சேர்ந்து மொத்தமாக அங்கு மின்னல்களை ஏற்படுத்தி உள்ளது.

என்ன சொல்கிறார்கள்
இது தொடர்பாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், இதுபோன்ற ஒரு நிகழ்வை நாங்கள் பார்த்ததே இல்லை. இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை. 10 வருடத்தில் ஒரு முறை மின்னல் அடிப்பதே அரிது. ஆனால் இப்போது அடிக்கடி இப்படி நடக்கிறது. அதிலும் கடந்த 3 நாளில் தினமும் மின்னல் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காலநிலை
காலநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை உயர்ந்துவிட்டது. இதனால் பனி உருகிவிட்டது. இதனால் மின்னல் ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தின் வார்னிங் சிக்னல் இது, என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2015ல் இருந்தே இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இப்போது மிக வேகமாக தினமும் மின்னல் ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

வெப்பம்
வெப்பத்தால் ஐஸ் உருகுவதே இதற்கு காரணம். இது ஒரு பக்கம் கடல் மட்டத்தை உயர்த்தும். இன்னொரு பக்கம் மின்னல் காரணமாக ஆர்க்டிக் பகுதியில் கூட காட்டுத்தீ ஏற்படும். இது மேலும் வெப்பத்தை உயர்த்தி ஐஸ் வேகமாக உருகுவதை ஊக்குவிக்கும். நொடியில் எல்லாம் மாறிப்போகும் ஆபத்து உள்ளது என்கிறார்கள். ஏற்கனவே ரஷ்யாவில் போரேல் சைபீரியா அருகே இப்படி அதிகமாக மின்னல் ஏற்படுகிறது.

மின்னல்
இதனால் அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. சைபீரியாவில் மின்னல் காரணமாக ஐஸ் நிரம்பி இருந்த பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு 2 மில்லியன் ஏக்கர் நாசமாகி உள்ளது. தொடர்ந்து மின்னல் தாக்குதல் ஏற்பட்டால் இது போன்ற தீ அதிகம் ஏற்படும். இது வெப்பநிலையை மேலும் உயர்த்தும் அபாயம் உள்ளது என்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் மிக மோசமான காலகட்டத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications