"இனி கரைப்பதற்கு அஸ்தி கூட கிடையாது".. மனித உடல்களை உரமாக மாற்ற முடிவு.. அமெரிக்காவில் பரபர அனுமதி
நியூயார்க்: இறந்து போன மனிதனை இயற்கை மணி உரமாக மாற்றும் புதிய நடைமுறைக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறைக்கு அனுமதி வழங்கும் 6-வது நகரம் என்ற பெயரை நியூயார்க் பெற்றிருக்கிறது.
பெருகி வரும் மக்கள்தொகையால் இடுகாடுகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் அனைத்து நாடுகளும் இந்த நடைமுறைக்கு மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

"இறந்தும் பிரயோஜனமில்லை"
மனிதன் இருந்தும் பயனில்லை.. இறந்தும் பயனில்லை என பரலவாக சொலவடை ஒன்று உண்டு. அதாவது, இருக்கும் போதும் உலகத்திற்கு மனிதனால் எந்த பிரயோஜனும் இல்லை; இறந்த பிறகும் எந்த பயனும் இல்லை என்பதை குறிக்கும் விதமாகவே இவ்வாறு சொல்லப்படுகிறது. உலகில் மனிதனை தவிர பெரும்பாலான மிருகங்கள் இறந்து போனாலும் ஏதாவது ஒரு வகையில் உலகுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. காடுகளில் வாழும் மிருகங்கள் இருந்தால் அது மண்ணுக்கு உரமாகிவிடும். ஊர்களில் ஆடு, மாடுகள் இறந்தால் மனிதர்களுக்கு உணவாகி விடுகின்றன. ஆனால், மனிதன் மட்டும்தான் இறந்த பின்னர் ஊருக்கு வெளியே புதைக்கவும், எரிக்கவும் படுகிறான். இதனால் இயற்கைக்கு எந்த பயனும் இல்லாமல் மனிதனின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

மனிதனை மண்ணாக மாற்றும் தொழில்நுட்பம்
அதுமட்டுமல்லாமல், மனிதனை எரிப்பதால் கரியமிலவாயு வெளியேறி உலக வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கிறது. இல்லை, நாங்கள் புதைத்துவிடுவோம் எனக் கூறினாலும் அதற்கு சவப்பெட்டிகள் செய்வதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்நிலையில், இறந்த மனிதனை மண் உரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். எனினும், இதை முதலில் எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. வருடங்கள் ஓட ஓட, உலக வெப்பமயமாதலின் தாக்கம் காரணமாக இயற்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலைக்கு பெரும்பாலான நாடுகள் மாறிவிட்டன.

மனிதன் மண்ணாக மாறுவது எப்படி?
அதன்படி, அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன்தான் முதன்முதலில் 2019-ம் ஆண்டு இறந்த மனிதனை மண்ணாக மாற்றும் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்தது. இந்த நடைமுறையின்படி, ஒரு கட்டையால் செய்யப்பட்ட கன்டெய்னர் இருக்கும். இறந்துபோன மனிதனின் சடலத்தை அதற்குள் வைத்து விடுவார்கள். அந்த சடலத்தை மரத்துகள்கள், புற்கள், செடி, கொடிகள் ஆகியவற்றால் மூடிவிடுவார்கள். இதனால் பாக்டீரியாக்கள் விரைவிலேயே அந்த உடலை கெட்டுப்போக செய்துவிடும். பின்னர் ஒரு மாதம் கழித்து அந்த கண்டெய்னர் சூடேற்றப்படும். இந்த செயல்முறைகளுக்கு (process) பிறகு, அந்த உடல் மண்ணாகவே மாறிவிடும்.

இயற்கையுடன் கலந்துவிடும் மனிதன்
ஆனால், இந்த மண் சாதாரண மண்ணை விட பல மடங்கு உரம் மிக்கதாக இருக்கும். மரம், செடி, கொடிகளின் வளர்ச்சிக்கு இந்த மண் மிகவும் உதவும். இறந்த மனிதரின் உறவினர்கள், அந்த மண்ணை பெற்றுக்கொண்டு சென்று மரம் செடிகளை நட்டு வைக்கலாம். இல்லையெனில், அரசாங்கமே அந்த மண்ணை எடுத்து காடுகளிலும், ஊர்களிலும் உள்ள மரங்களுக்கு உரமாக போட்டுவிடும். ஆரம்பத்தில், இந்த நடைமுறைக்கு மக்கள் ஆதரவு தரவில்லை. ஆனால், தற்போது புதைப்பது, எரிப்பதை காட்டிலும் இந்த நடைமுறைக்கு மக்கள் மாறி வருகின்றனர். இதனால் அமெரிக்காவிலேயே அடுத்தடுத்து 5 நகரங்கள் இந்த நடைமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. தற்போது இந்த வரிசையில் நியூயார்க்கும் இணைந்துள்ளது. இனி எதிர்காலத்தில் உலகம் முழுவதும் இந்த நடைமுறைக்கு மாறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications