அமெரிக்காவுக்கு 100 ஆண்டுகளில் இல்லாத சோதனை- பிரதிநிதிகள் சபை சபாநாயகர் தேர்வில் பெரும் இழுபறி!
நியூயார்க்: அமெரிக்கா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சபாநயகரை தேர்வு செய்ய முடியாமல் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் தேர்வில் இழுபறியே தொடர்ந்து நீடித்து வருகிறது.

அமெரிக்காவின் நாடாளுமன்றமானது செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகியவற்றைக் கொண்டது. இந்த இரு சபைகளிலும் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றிருந்தது. அதனால் சிக்கல் எதுவும் இல்லை.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைக்கால தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி அதிக இடங்களைப் பெற்று கைப்பற்றியது. இங்கிருந்துதான் சிக்கலும் தொடங்கியது. பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 435 இடங்கள். பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு தேவை 218 இடங்கள். டிரம்ப்பின் குடியரசு கட்சி 222 இடங்களைப் பெற்றது. ஜோ பைடனின் ஜனநாயக கட்சி 212 இடங்களை மட்டுமே பெற்றது.
இதனையடுத்து பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பதவி விலகினார். சபாநாயகராக இருந்த நான்சி பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கின. குடியரசுக் கட்சியின் Kevin McCarthy- கெவின் மெக்கார்த்தி சபாநாயகர் பதவிக்குப் போட்டியிட்டார். சபாநாயகரை தேர்வு செய்ய அவருக்கு 218 வாக்குகள் தேவை. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. அதனால் கெவின் மெக்கார்த்தி எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் குடியரசுக் கட்சியின் சில எம்.பி.க்கள் கெவின் மெக்கார்த்திக்கு எதிராக வாக்களித்தனர். குடியரசுக் கட்சியின் 20 எம்.பிக்கள் கெவின் மெக்கார்த்திக்கு எதிராக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து மொத்தம் 6 முறை சபாநாய்கர் பதவிக்கான வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. 6 முறையும் கெவின் மெக்கார்த்தியால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை.

குடியரசு கட்சியின் எம்பிக்கள், புளோரிடா எம்பி பிரையன் டொனால்ட்ஸை ஆதரிக்கின்றனர். அதேபோல் நியூயார்க்கின் எம்பி ஹக்கீம் ஜெப்ரீஸையும் சிலர் ஆதரிக்கின்றனர். இப்படி குடியரசு கட்சியின் எம்பிக்கள் வாக்களிப்பதால் சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு முட்டுக்கட்டை நிகழ்ந்துள்ளது. கடந்த 1923-ம் ஆண்டு இதேபோல அமெரிக்காவின் சபாநாயகர் தேர்தலில் பலமுறை வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications