நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரும் 21ம் தேதியோடு உலகம் அழியுமாமே.. ஏன் இப்படி.. மாயன் காலண்டர் சொல்வது உண்மைதானா?

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ், உள்நாட்டு அமைதியின்மை, பொருளாதார மந்த நிலை, வெட்டுக்கிளிகள் படைஎடுப்பு , எரிமலை வெடிப்புகள் மற்றும் சூறாவளிகள் உலகம் அழிவதற்கான அடையாளம் காட்டியதாக நீங்கள் நினைத்திருந்தால் அது சரியாக கூட இருக்கலாம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று புதிய உச்சம் பெற்றுள்ள நிலையில் 2020ம் ஆண்டு மோசமான ஆண்டாக மாறி உள்ளது. உலகில் பேரழிவை ஏற்படுத்திய ஆண்டாக 2020 வரலாற்றில் மாறி உள்ளது.

பொருளதார முடக்கத்தாலும், நோய் பாதிப்பாலும் பல லட்சம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். உலக போர்களை விடவும் பல நாடுகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என்கிற கவலை மக்களிடையே அதிகமாக உள்ளது. கொரோனா ஒழியாமல் இனி உலகிற்கு விடிவு இல்லை என்கிற அளவிற்கு பேராபத்தை உருவாக்கி வருகிறது அந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ்.

 தினம் 1.5 ஜிபி இன்டர்நெட் வசதி.. நிறைய அவுட் கோயிங் அழைப்புகள்.. ஜியோ அதிரடி ஆஃபர்கள் தினம் 1.5 ஜிபி இன்டர்நெட் வசதி.. நிறைய அவுட் கோயிங் அழைப்புகள்.. ஜியோ அதிரடி ஆஃபர்கள்

ஜூன் 21 கடைசி நாள்

ஜூன் 21 கடைசி நாள்

இந்நிலையில் மாயன் காலாண்டர் அடிப்படையில் பார்த்தால் சதிக் கோட்பாட்டாளர்கள் ஜூன் 21 - ம் தேதியோடு உலகம் அழிந்துவிடும் என்று கூறுகிறார்கள். இது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

2012ல் அழியவில்லை

2012ல் அழியவில்லை

டிசம்பர் 21 தேதி, 2012ல் உலகம் அழியும் என்று மாயன் காலண்டரில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் மாயன் காலண்டர் படி உலகில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முற்றிலும் தவறு என்று தகவல்கள் என்று நம்பப்பட்டது.

கணக்கை மாற்றுங்க

கணக்கை மாற்றுங்க

ஆனால் டுவிட்டரில் சதிக் கோட்பாட்டாளர்கள் இப்போது வெளியிட்ட பதிவில், பூமி சூரியனைச் சுற்றுவதன் அடிப்படையில் கிரிகோரியன் காலண்டர் அறிமுகம் செய்யப்பட்டது. கிரிகோரியன் காலண்டருக்கு முன்பு ஜூலியன் காலண்டர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. கிரிகோரியன் காலாண்டர் பயன்படுத்தியதால் ஆண்டுகள் குறித்து தவறான கணக்கீடு செய்துள்ளோம் . 11 நாள்களை ஒவ்வொரு ஆண்டு நாம் இழந்துள்ளோம்., அதையும் சேர்த்து கணக்கீடு செய்தால் 2020 ம் ஆண்டு தான் சரியான ஆண்டு என்றும் கூறுகிறார்கள்.

வருடங்களை சேர்க்க வேண்டும்

வருடங்களை சேர்க்க வேண்டும்

விஞ்ஞானி பாலோ டாகலோகின் கடந்த வாரம் வெளியிட்ட ட்விட்டில் , "ஜூலியன் காலண்டரைப் பின்பற்றினால் தொழில்நுட்ப ரீதியில் இப்போது நாம் 2012 - ல் இருப்போம். ஜூலியன் காலண்டரை கிரிகோரியன் காலண்டர் அடிப்படையில் மாற்றம் செய்ததால் நாம் 11 நாள்களை இழந்துவிட்டோம். 268 ஆண்டுகளாக கிரிகோரியன் காலண்டர் பயன்படுத்தப்படுகிறது. (1752 - 2020 ) 268 வருடங்களில், ஒவ்வொரு வருடத்துக்கும் 11 நாள்களைச் சேர்த்து பார்த்தால் 2948 நாள்கள் நமக்குக் கிடைக்கும். 2948 / 365 = 8 வருடங்கள்" என்று வருகிறது. எனவே 2012 உடன் 8 வருடங்களை சேர்த்தால் 2020 ம் ஆண்டு வருகிறது" என்றார். ஆனால் இந்த டுவிட்டை அடுத்த சில நாள்களில் அவர் நீக்கிவிட்டார்.

உலகின் இறுதி நாள்

உலகின் இறுதி நாள்

இந்நிலையில் இந்த கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு கணக்கிட்டால் ஜூன் 21, 2020 ம் தேதி தான் டிசம்பர் 21, 2012 ஆக இருக்க முடியும் என்கிறார்கள் . உலகில் உள்ள சதிக்கோட்பாட்டாளர்கள் முன்பு டிசம்பர் 21, 2012 என்ற தினத்தை உலகின் இறுதி நாள் என்று கூறிய நிலையில் தற்போது ஜுன் 21ம் தேதி தான் உலகின் இறுதி நாளாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே மக்கள் கொரோனா அச்சத்தால் நொறுங்கி போய் உள்ளார்கள். இந்த சூழலில் புது பீதியை மாயன் காலண்டரை வைத்து கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.

உலகம் அழிவதாக வதந்தி

உலகம் அழிவதாக வதந்தி

முன்னதாக 2012 ஆம் ஆண்டில், டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் முடிவடைவதாக டூம்ஸ்டே கோட்பாட்டாளர்கள் நம்பினர், மேலும் மெக்ஸிகோ மற்றும் குவாத்தமாலாவில் உள்ள மாயன் தளங்களுக்கு ஆதரவு கூட்டம் திரண்டது. ஆனால் உலகம் அப்படி எந்த ஆபத்தையும் சந்திக்கவில்லை. இதனிடையே பண்டைய மாயன் பிரமிடுகள் துப்புரவு இல்லாமல் மோசமாக அழுக்குடன் கைவிடப்பட்டுள்ளது.

English summary
Mayan calendar was wrong according to a conspiracy theory on Twitter, and while the world didn’t end on Dec. 21, 2012, as originally prophesied by calendar readers, Mayan doomsday is sometime this week or next.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X