Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கரவாதம் எந்த மதத்துடனும் தொடர்புடையாக இருக்கக் கூடாது.. UNSC இல் ஜெய்சங்கர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பயங்கரவாதத்தின் தீமை உலகை அச்சுறுத்துகிறது. பயங்கரவாதத்தில் நல்ல பயங்கரவதம், கெட்ட பயங்கரவாதம் என்ற வேறுபாடு எல்லாம் கிடையவே கிடையாது என்ற திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தை ஆயுதங்கள் மூலம் கைப்பற்றிய நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு இது பற்றி விவாதித்தது.

அப்போது இந்தியா சார்பில் கலந்து கொண்டு பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அடுத்த மாதம், நியூயார்க்கில் நடந்த கொடூரமான 9/11 சோகத்திற்கு 20 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவில், பயங்கரவாதம் காரணமாக பெரும் இழப்புகளை சந்தித்துள்ளோம். 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் எங்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது.

புல்வாமா குண்டுவெடிப்பு

புல்வாமா குண்டுவெடிப்பு

2016 பதான்கோட் விமானப்படைத் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமாவில் எங்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தற்கொலைக் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் ஆறாத வடுவாக உள்ளது. பயங்கரவாதத்தின் கொடுமையால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நாம் ஒற்றுமையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும்

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

பயங்கரவாதத்துடன் நாம் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது. தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் எந்த மதத்துடனும் தொடர்புடையதாக இருக்கக்கூடாது ... ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பு ஆற்றல் மிக்கதாக மாறிவிட்டது மற்றும் தொடர்ந்து அதன் தடம் விரிவாக்க முயல்கிறது.

பயங்கரவாதம்

பயங்கரவாதம்

ஆப்கானிஸ்தானில் நிகழும் நிகழ்வுகள் இயற்கையாகவே பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கான தாக்கங்களை பற்றிய உலகளாவிய கவலைகளை அதிகரித்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் . இதுபோன்ற செயல்களுக்குப் பின்னால் உள்ள உந்துதல்களைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் விதிவிலக்கு அல்லது நியாயம் கற்பிக்க கூடாது . பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் எந்த மதத்துடனும், தேசியத்துடனும், நாகரிகத்துடனும் அல்லது இனக்குழுவுடனும் தொடர்புடையதாக இருக்கக்கூடாது.

ஜெய்சங்கர் கவலை

ஜெய்சங்கர் கவலை

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட, பாதுகாப்பு, நிதி மற்றும் பிற கட்டமைப்புகளை கடுமையாக்கி வைத்த போதிலும், பயங்கரவாதிகள் தொடர்ந்து பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கவும், வளப்படுத்தவும் மற்றும் செயல்படுத்தவும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்" இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+