Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்கா அடங்கி இருந்த நேரம் பார்த்து.. வேலையை காட்டிய கிம்.. சீறி வந்த ஏவுகணை.. பிடனுக்கு சோதனை!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் பிடனுக்கு இது சோதனை காலம் என்றுதான் கூற வேண்டும். ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெற்றி, ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் என்று பல தரப்பில் இருந்தும் பிடன் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். ஏன் சொந்த நாட்டிலேயே பிடனுக்கு வழங்கப்படும் மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் சரிய தொடங்கி உள்ளது . இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்க அதிபர் பிடனுக்கு சவாலாக மீண்டும் வடகொரியா களமிறங்கி உள்ளது.

Recommended Video

    சரியான நேரம் பார்த்து America-விடம் வேலையை காட்டிய North Korea

    வரலாற்று ரீதியாகவே எப்போதும் வடகொரியா அமெரிக்கா உறவு சரியாக இருந்தது கிடையாது. தென் கொரியா அமெரிக்க ஆதரவு நாடாகவும், வடகொரியா சோவியத் உள்ளிட்ட கம்யூனிச நாடுகளின் ஆதரவாகவும் இருந்து வந்துள்ளது. கிம் ஜோங் உன் வடகொரியா அதிபரான பின் அமெரிக்கா வடகொரியா உறவு மிக மோசமான நிலையை எட்டியது.

    முக்கியமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி அமெரிக்காவிற்கு சவால் விட்டது. அணு ஆயுத ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை சோதனை செய்து அமெரிக்காவிற்கு வடகொரியா நேரடியாக சவால் விட்டது. அமெரிக்காவும் வடகொரியாவை பல இடங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. அமெரிக்காவில் டிரம்ப் அதிபரான பின் இரண்டு நாட்டு உறவு மிக மோசமான நிலையை அடைந்தது.

    விமர்சனம்

    விமர்சனம்

    2020ம் வருட தொடக்கத்திலேயே டிரம்ப் வடகொரியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவேன் என்று குறிப்பிட்டார். என்னுடைய சீட்டிற்கு அருகில்தான் பட்டன் இருக்கிறது. அதை அழுத்தினேன் என்றால் உங்கள் நாட்டில் அணு குண்டு வெடிக்கும். உங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை விட எங்களிடம் அதிகமாக இருக்கிறது, வடகொரியா எங்களிடம் மோத கூடாது. கவனமாக இருங்கள் என்று டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் வெடிக்குமோ என்ற அச்சமும் பதற்றமும் நிலவியது.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இந்த நிலையில் அதே வருடம் இரண்டு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருவருக்கும் முதல்முறை சந்தித்துக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கைகள் வைத்தது. ஆனால் இதை வடகொரியா முழுமையாக ஏற்கவில்லை. இதில் இறுதியாக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. வடகொரியா கொஞ்சம் கொஞ்சமாக அணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டதாக செய்திகள் வந்தன. இது இரண்டு நாட்டு உறவில் ஆரோக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்பும் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால் இரு நாட்டு உறவு மீண்டும் பழைய நிலைக்கு சென்றது.

    அழுத்தம்

    அழுத்தம்

    இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி வடகொரியா திகில் கிளப்பி இருக்கிறது. இந்த முறை அதிக தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்ற முதல் வாரமே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதையடுத்து தற்போது மீண்டும் நீண்ட தொலைவுக்கு சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. நீண்ட தூரத்தில் இருக்கும் எதிரி நாடுகளை குறி வைக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    எத்தனை தூரம்

    எத்தனை தூரம்

    1500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறனோடு இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டு உள்ளது. அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது ஆகும் இது. வடகொரியா அருகே உள்ள கடல் பகுதியில் சீறி பாய்ந்த இந்த ஏவுகணை சரியாக இலக்கை தாக்கியது. சனிக்கிழமை இரவு ஒரு சோதனை நடைபெற்றது. நேற்று இரவு இன்னொரு சோதனை நடைபெற்றது. இரண்டு சோதனையும் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக கூறபடுகிறது. வடகொரியாவிடம் பொதுவாக தூரம் குறைந்த தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ள நிலையில் இந்த புதிய சோதனை அந்த நாட்டிற்கு அதிக பலம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    வடகொரியா இந்த ஏவுகணையை திறனை குறைத்து சொல்வதாகவும் கூறப்படுகிறது. இது 1500 கிமீ தூரம் கிடையாது. அதற்கும் அதிகமான தூரம் கொண்டதாக இது இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அமெரிக்கா இந்த ஏவுகணை சோதனையை விமர்சனம் செய்துள்ளது. நீண்ட தூரத்திற்கு தாக்கும் வகையில் வடகொரியா இந்த சோதனையை செய்துள்ளது. எதிர்ப்புகளை மீறி அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இப்படி அந்த நாடு சோதனைகளை செய்து வருகிறது. வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை காட்டும் ஏவுகணை சோதனையாக இதை நாங்கள் பார்க்கிறோம். கொரிய தீபகற்பத்தில் மட்டுமன்றி ஜப்பான் போன்ற நாடுகளிலும் இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

     கொரியா

    கொரியா

    அமெரிக்காவிற்கு எதிரான சோதனை இது என்று வடகொரியா ஊடகங்கள் மார்தட்டி உள்ளது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை தடுக்கும் சோதனை இது என்று அந்நாட்டு ஊடகங்கள் வெளிப்படையாக செய்தி வெளியிட்டு இருக்கின்றன. அமெரிக்கா ஆப்கானில் தோல்வி அடைந்து ஒடுங்கி போய் இருக்கும் நேரம் பார்த்து இப்படி வடகொரியா வாலாட்டி உள்ளது. முக்கியமாக பிடன் ஆசியாவில் நடக்கும் பிரச்சனைகளையே சமாளிக்க முடியாமல் கஷ்டப்படும் போது வடகொரியா மீண்டும் அமெரிக்காவிற்கு சவால் விட்டு.. சிக்கலாக மாறியுள்ளது. இதை பிடன் எப்படி சமாளிக்க போகிறார் என்பதே கேள்வியாக உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+