நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்னு இரண்டு இல்ல, 15 உருமாறிய கொரோனாவுக்கு எதிரா எங்க தடுப்பூசி வேலை செய்யும்... பைசர் பெருமிதம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் ஃபைசர் தடுப்பூசி வேலை செய்யும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் பல நாடுகளிலும் கடந்த மாதம் தடுப்பூசி வழங்கும் பணிகள் மெல்ல தொடங்கப்பட்டன. இதனால் வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், அதற்கு நேர் மாறாகப் பல நாடுகளிலும் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்தது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

 தடுப்பூசி வேலை செய்யுமா

தடுப்பூசி வேலை செய்யுமா

இந்த உருமாறிய கொரோனா குறித்த செய்தி மக்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், முன்பே உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்த உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் வேலை செய்யுமா என்ற கேள்விகள் எழ தொடங்கியது.

 தடுப்பூசி பலனளிக்கும்

தடுப்பூசி பலனளிக்கும்

இந்நிலையில், ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இந்த உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் வேலை செய்யும் என்று அந்நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட்ட நபர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் இந்த உருமாறிய கொரோனாவை செலுத்தியபோது, அதை அழிக்கும் வகையில் ஃபைசர் தடுப்பூசி செயல்பட்டதாகவும் தெரிவித்தனர்.

 15 கொரோனா வகை

15 கொரோனா வகை

பிரிட்டன் வகை கொரோனாவைத் தாண்டியும் பல உருமாறிய கொரோனா வகைகள் உலகில் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சுமார் 15 உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராகத் தடுப்பூசி சோதனை செய்யப்பட்டதாகவும் அதில் அனைத்து வகைகளுக்கு எதிராகவும் தடுப்பூசி பலனளிப்பதாகவும் ஃபைசர் கூறியுள்ளது.

 தென் ஆப்பிரிக்க வகை கொரோனா

தென் ஆப்பிரிக்க வகை கொரோனா

மேலும், தென் ஆப்பிரிக்காவிலும் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசிகள் வேலை செய்யாமல் போகலாம் என்று உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், தென் ஆப்பிரிக்க வகை கொரோனாவுக்கு எதிராகவும் ஃபைசர் தடுப்பூசி பலனளிப்பதாக அந்நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

English summary
Pfizer Inc and BioNTech's COVID-19 vaccine appeared to work against a key mutation in the highly transmissible new variants of the coronavirus discovered in the UK and South Africa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X