நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புடின் செம கோபத்தில் இருக்கிறார்! தப்பான முடிவு எடுக்க போகிறார்! CIA பரபர வார்னிங்.. அந்த ஆபத்து?

Google Oneindia Tamil News

நியூயார்க்: ரஷ்ய அதிபர் புடின் கோபத்தில் இருக்கிறார், அவர் தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு வாரமாக நடந்து கொண்டு இருக்கிறது. உக்ரைனில் இப்போது கார்கிவ், சுமி பகுதிகளில் ரஷ்யா கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கீவ் நகரம் வெளியே ரஷ்ய படைகள் ஆயுதங்கள் இன்றி லைனில் நிற்கிறது.

வரும் நாட்களில் போதிய ஆயுதங்கள் டெலிவரி செய்யப்பட்ட பின் ரஷ்ய படைகள் முழு வீச்சில் கீவ் நகரத்தின் மீது தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.

மோடி செய்த 2 அவசர கால்! கிரீன் சிக்னல் தந்த புடின், செலன்ஸ்கி! உக்ரைன் சுமியில் நடந்த பரபர Operationமோடி செய்த 2 அவசர கால்! கிரீன் சிக்னல் தந்த புடின், செலன்ஸ்கி! உக்ரைன் சுமியில் நடந்த பரபர Operation

ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் புடின்

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் குறித்து அமெரிக்காவின் சிஐஏ இயக்குனர் வில்லியம்ஸ் பர்ன்ஸ் அந்நாட்டு செனட்டர்கள் இடையே நடந்த கூட்டத்தில் பேசிய போது, புடின் மிகவும் கோபமாக இருக்கிறார். அவர் தனிமையில் இருக்கிறார். தன்னுடைய உக்ரைன் போர் பிளான்படி செல்லவில்லை என்ற கோபத்தில் இருக்கிறார். இதனால் அவர் தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த போர் என்பது அவரின் பலநாள் திட்டம்.

சிஐஏ எச்சரிக்கை

சிஐஏ எச்சரிக்கை

உலக நாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். சோவியத் பெருமையை மீட்க வேண்டும் என்பது அவரின் பலநாள் கனவு. அவரின் தனிப்பட்ட பர்சனல் விஷயமாக இந்த போரை பார்க்கிறார். ஐரோப்பா, அமெரிக்கா மீதான அவரின் பல வருட கோபத்தை இந்த போரில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த போர் என்பது சாதாரண விஷயம் கிடையாது. அவர் இப்போது விரக்தியிலும், கோபத்திலும் இருக்கிறார் என்று நான் கூறுவேன். இது கொஞ்சம் ஆபத்தானது.

தனிமை

தனிமை

இதனால் அவர் ரஷ்ய படைகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. தீவிர தாக்குதல்களை நடத்த அவர் ரஷ்ய படைக்கு உத்தரவிடலாம்.. பொதுமக்கள் பற்றி கவலைப்படாமல் தாக்குதல் நடத்த அவர் உத்தரவிடும் வாய்ப்புகள் உள்ளன இதனால் அவர் அதிக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவர் பல காலமாக ரஷ்ய ஆயுதங்களை மாடர்னாக்க முயன்று வருகிறார்.

அணு ஆயுதம்

அணு ஆயுதம்

இதற்காக பல ஆராய்ச்சிகளை ரஷ்யா செய்துள்ளது. சிறிய ரக அணு ஆயுதங்களை உருவாக்க ரஷ்யா முயன்று வந்தது. இப்போது அவர் அந்த அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ஆச்சர்யம் இல்லை . சிறிய ரக அணு ஆயுதங்களை அவர் பயன்படுத்தும் நிலைக்கு செல்லலாம். அது போன்ற தவறான முடிவுகளை அவர் எடுக்கும் ஆபத்து உள்ளது.

Recommended Video

    Russia இந்தியாவுக்கு செய்த மறக்க முடியாத உதவி | Oneindia Tamil
     எதிர்பார்க்கவில்லை

    எதிர்பார்க்கவில்லை

    உலக நாடுகள் ரஷ்யாவை ஒதுக்கும் என்று புடின் நினைக்கவில்லை. அதனால் அவர் தனது ஆலோசகர்கள் மீதும் கோபத்தில் உள்ளார். அவருக்கு உண்டான நெருங்கிய வட்டம் சுருங்கிக்கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த வட்டாரம் சிறிதாக்கிக்கொண்டே செல்கிறது. புடின் போன்ற நபர்கள் இது போன்ற சூழ்நிலையில் தவறு செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சிஐஏ இயக்குனர் வில்லியம்ஸ் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

    English summary
    Russia president Putin is completely isolated and not in stable mood says CIA to US law makers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X