நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதென்ன தூரத்தில்.. உருளைக்கிழங்கு மாதிரி? தொலைநோக்கியில் தெரிந்த விசித்திர உருவம்.. Zoom செய்தால்..!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஒரு கிரகம் என்றால் அது கோளமாக இருக்க வேண்டும் என்றுதானே பலர் நினைத்து இருப்போம்.. ஆனால் அப்படி எல்லாம் இல்லை.. மார்க்கெட்டில் கிடைக்கும் உருளைக்கிழங்கு வடிவத்திலும் கிரகம் இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியாளர் குழு ஒன்று கண்டுபிடித்த புதிய கிரகம் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

Astronomy and Astrophysics என்ற விண்வெளி ஆய்வு ஜர்னலில் இந்த கிரகம் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. ஐரோப்பா, நாசா, ரஷ்யா ஆகிய பல்வேறு நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் தொலைநோக்கிகளின் உதவியோடு இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் CHEOPS என்ற விண்வெளி ஆராய்ச்சி மிஷன், நாசாவின் Hubble தொலைநோக்கி, Spitzer என்ற விண்வெளி தொலைநோக்கி ஆகியவை ஒன்றாக சேர்ந்து இந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். சரி இந்த கிரகத்தில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம்!

கிரகம்

கிரகம்

ஐரோப்பாவின் CHEOPS என்ற விண்வெளி ஆராய்ச்சி மிஷன், நாசாவின் Hubble தொலைநோக்கி, Spitzer என்ற விண்வெளி தொலைநோக்கி ஆகியவற்றின் விண்வெளி ஆராய்ச்சி டேட்டாவை வைத்து அந்த கிரகத்தை ஆராய்ந்து உள்ளனர். பொதுவாக தொலைவில் இருக்கும் கிரகத்தை ஆராயும் போது அதன் சூரியனையும் ஆராய்ச்சி செய்வார்கள். அதாவது அந்த கிரகம் சுற்றிவரும் சூரியனையும் ஆராய்ச்சி செய்வார்கள். அந்த சூரியனை கிரகம் ஒவ்வொரு முறை சுற்றும் போதும் சூரியனின் ஒளி சில நிமிடம் அல்லது நொடிகள் மங்கும். இந்த மங்க கூடிய ஒளியை வைத்து ஒரு கிரகம் எவ்வளவு பெரியது, அது எவ்வளவு வேகமாக சுற்றுகிறது, எப்படிப்பட்ட தோற்றம் கொண்டது என்று கண்டுபிடிக்க முடியும்.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

மங்கும் ஒளியை வைத்தே அனைத்தையும் கண்டுபிடிக்க முடியும். அதேபோல்தான் இந்த கிரகத்தையும் ஆராய்ச்சி செய்துள்ளனர். அப்போதுதான் நாசாவின் Hubble தொலைநோக்கி கொடுத்த சில டேட்டா ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது. அந்த டேட்டாக்களை பார்த்த போது அந்த கிரகத்தின் வடிவம் உருளைக்கிழங்கு போன்றது என்று கண்டுபிடித்துள்ளனர். கிரகத்திற்கு உண்டான எல்லா இயல்பும் இதற்கு இருந்துள்ளது. சூரியன் ஒன்றை சுற்றியும் வந்துள்ளது. ஆனால் கோளமாக இல்லாமல் உருளைக்கிழங்கு வடிவில் இருந்துள்ளது.

பெயர் என்ன?

பெயர் என்ன?

இதற்கு WASP-103b என்று பெயர் வைத்துள்ளனர். WASP-103 என்ற சூரியனை இது சுற்றி வருகிறது. hubble தொலைநோக்கி மூலம் இதன் வடிவத்தை கண்டுபிடித்த அந்த நொடி ஆராய்ச்சியாளர்கள் உறைந்து போய் உள்ளனர். காரணம் இதன் உருளைக்கிழங்கு வடிவம். இன்னொரு பக்கம் இது ஜூபிட்டர் கிரகத்தை விட மிகவும் பெரிதாக இருந்துள்ளது. ஹெர்குலிஸ் நட்சத்திர கூட்டத்தில் பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த WASP-103b இருந்துள்ளது.

வேகமாக சுற்றுகிறது

வேகமாக சுற்றுகிறது

இதில் இன்னொரு வியப்பு அளிக்க கூடிய விஷயம் என்றால் இந்த WASP-103b தனது சூரியனான WASP-103ல் இருந்து வெறும் 20 ஆயிரம் மைல்கள் தொலைவில்தான் உள்ளது. இதனால் WASP-103b தனது சூரியனை ஒருமுறை மொத்தமாக சுற்றி வர வெறும் 22 மணி நேரம் ஆகிறது. அதாவது ஜூபிட்டர் அளவில் இருக்கும் உருளைக்கிழங்கு தோற்றம் கொண்ட கிரகம் ஒன்று தனது சூரியனை வெறும் 22 மணி நேரத்தில் சுற்றி வருகிறது... கேட்கவே வியப்பாக இருக்கிறதா? பூமி சூரியனை சுற்ற 365 நாட்கள் ஆகும் என்பதை நினைவில் கொள்க!

2014 WASP-103b

2014 WASP-103b

2014லேயே இந்த கிரகம் இருப்பதை கண்டுபிடித்துவிட்டனர். ஆனாலும் இப்போதுதான் அதன் முழு டேட்டாவை வைத்து அதன் வடிவத்தை கண்டுபிடித்துள்ளனர். இது முழுக்க முழுக்க தீ பிழம்பாக காட்சி அளிக்க கூடிய கிரகம். சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அதிக வெப்பமாக இருக்கிறது என்று கூறி உள்ளனர். ஜூபிட்டரை விட 1.5 மடங்கு பெரிய அளவு கொண்டது இது. அதோடு கொஞ்சம் வீங்கியும் இது காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தூரம்

தூரம்

என்னதான் பல மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் பூமியை போல திடமான தோற்றம் கொண்டது இது. இதன் உட்பகுதி திடமாகவும், நெருப்பாகவும் இருக்கும். அதற்கு மேல் திரவம் காணப்படுகிறது. அதை சுற்றி காற்று காணப்படுகிறது. கிட்டத்தட்ட ஜூபிட்டர்மற்றும் பூமியின் கலவை என்று இதை சொல்லலாம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எத்தனை கிரகம்

எத்தனை கிரகம்


இதுவரை சர்வதேச அளவு; 4884 கிரகங்கள் கிரகம் என்ற முத்திரையை பெற்றுள்ளது. 8400 கிரகங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளது. இதில் பல வித்தியாசமான வடிவம் கொண்ட கிரகங்கள் உள்ளன. பல விசித்திர உருவம் கொண்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல அனுமதி பெற லைனில் நிக்கிறது. ஆனால் எந்த கிரகமும் தனது நட்சத்திரத்திற்கு இவ்வளவு அருகில்.. இவ்வளவு பெரிதாக.. உருளைக்கிழங்கு போல இருந்தது கிடையாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Researchers found a new potato-shaped planet far away from earth: Why is it important?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X