சூப்பர் ஹியூமன் இம்யூனிட்டி.. எல்லா வகை கொரோனாவையும் எதிர்க்கும் ஆண்டிபாடி.. செம கண்டுபிடிப்பு
நியூயார்க்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கொரோனாவிற்கு எதிராக சிலருக்கு சூப்பர் ஹியூமன் சக்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்களுக்கு சூப்பர் ஹியூமன் இம்யூனிட்டி இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனாவிற்காக பல்வேறு வேக்சின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் எம்ஆர்என்ஏ வகை வேக்சின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி கொரோனா வந்து குணமடைந்தவர்களும் வேக்சின் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா மூலம் கிடைக்கும் தடுப்பு சக்தி ஆண்டிபாடி குறைவாக இருக்கும். இதனால் வேக்சின் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் வலிமையான ஆண்டிபாடிகளை கொடுக்கும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது.

சோதனை
இந்த நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கொரோனாவிற்கு எதிராக சிலருக்கு சூப்பர் ஹியூமன் சக்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் வேக்சின் போடப்பட்ட 14 பேரிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. கொரோனா வந்து அதன்பின் அதில் இருந்து குணமடைந்து ஒரு டோஸ் வேக்சின் எடுத்தவர்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது.

சூப்பர் ஹியூமன்
இவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில்தான் சூப்பர் ஹியூமன் ஆண்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களிடம் அனைத்து வகையான உருமாறிய கொரோனா வகைகளையும் எதிர்க்கும் திறன் இருந்துள்ளது. 6 வகையான உருமாறிய கொரோனாவையும் எதிர்க்கும் திறன் இவர்களிடம் இருந்துள்ளது. கடினமான டெல்டா, டெல்டா +, ஈட்டா வகை கொரோனாவையும் எதிர்க்கும் திறன் இவர்களிடம் இருந்துள்ளது.

சிறப்பு
அதோடு மிக முக்கியமாக இவர்களிடம் பழைய 2003ம் ஆண்டு உருவாக்கிய கொரோனாவை குணப்படுத்தும் ஆண்டிபாடிகளும் இருந்துள்ளது. அதாவது இதுவரை உருவாக்கிய கொரோனா குடும்பத்தின் வைரஸ் வகைகளை எதிர்கொள்ளும் திறன் இவர்களிடம் இருந்துள்ளது. இதனால்தான் இந்த ஆண்டிபாடியை சூப்பர் ஹியூமன் ஆண்டிபாடி என்று கூறியுள்ளனர்.

யாருக்கு?
அதன்படி ஏற்கனவே கொரோனா வந்து அதன்பின் வேக்சின் கொடுக்கப்பட்ட நபர்களுக்குதான் இந்த சூப்பர் ஹியூமன் ஆண்டிபாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் வேக்சின் போட்டவர்கள் அல்லது கொரோனா வந்துவிட்டு வேக்சின் போடாதவர்கள் ஆகியோருக்கு சாதராண ஆண்டிபாடி மட்டுமே உள்ளது. மற்றபடி ஏற்கனவே கொரோனா வந்து அதன்பின் எம்ஆர்என்ஏ வகை வேக்சின் போட்டவர்களுக்கு இந்த சூப்பர் ஹியூமன் ஆண்டிபாடி இருந்துள்ளது.

எதிர்காலம்
இந்த சூப்பர் ஹியூமன் ஆண்டிபாடி காரணமாக இவர்களை எதிர்காலத்தில் வரக்கூடிய கொரோனா வகைகளையும் எதிர்க்க கூடிய ஆண்டிபாடி கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சோதனை 14 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இன்னும் பலரிடம் சோதனை நடத்தப்பட்டால் மட்டுமே எத்தனை பேருக்கு இந்த சூப்பர் ஹியூமன் ஆண்டிபாடி இருக்கிறது என்பது கண்டுபிடிக்க முடியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications