நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு காலத்தில் 144 ஆண்டுகள் காத்திருப்பு... ஆனால் இப்போது ஒரு நொடி போதும்... அசத்தும் ஜேம்ஸ் வெப்

Google Oneindia Tamil News

நியூயார்க்: சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமான நெப்டியூனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தெளிவாக படம் எடுத்திருக்கிறது. இந்த படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறக்கு நெப்டியூன் கிரகம் அதன் வளையங்களுடன் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 1989ல் வாயேஜர் 2 விண்கலம் நெப்டியூனை வளையங்களுடன் படம் பிடித்திருந்தது.

நெப்டியூன் கிரகம் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகம் என்பதால் அதனை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால் தற்போது அதன் மெல்லிய வளையங்களையே 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி படம் பிடித்திருப்பது இந்த தொலைநோக்கியின் திறனை வெளிப்படுத்தியுள்ளது.

கஞ்சா விற்ற 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை! சமூக விரோதிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த தீர்ப்பு! கஞ்சா விற்ற 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை! சமூக விரோதிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த தீர்ப்பு!

வெப் தொலைநோக்கி

வெப் தொலைநோக்கி

விண்வெளி ஆய்வுக்காக சுமார் ரூ.79,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, நமது பிரபஞ்சத்தின் கடந்த காலத்தை பற்றி அறிந்துகொள்ள விண்வெளிக்கு ஏவப்பட்டது. இது அவ்வப்போது, சில கிரகங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் தற்போது நெப்டியூன் கிரகத்தின் புகைப்படங்களை வெப் தொலைநோக்கி மிக பிரமாதமாக எடுத்து அனுப்பி இருக்கிறது.

144 ஆண்டுகள்

144 ஆண்டுகள்

1846ல் இந்த நெப்டியூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த கிரகம் குறித்த தகவல்களை முழுவதுமாக பெற 144 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாய் இருந்தது. இதன் பின்னர் 1989 இல் வாயேஜர் 2 விண்கலம் போகும் வழியில் சுமார் 4,000 கி.மீ தொலைவில் நெப்டியூனை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்தது. இதுதான் நெப்டியூனின் மிகச்சிறந்த படமாக இருந்தது. ஏனெனில் இந்த படத்தில் நெப்டியூனின் வளையங்கள் நன்றாக தெரிந்தன.

சுற்றிவர 164 ஆண்டுகள்

சுற்றிவர 164 ஆண்டுகள்

இதனையடுத்து ஹப்புள் தொலைநோக்கி சில படங்களை எடுத்தது. ஆனால் இவ்வாறு தெளிவான படங்களை எடுப்பது சாதாரண விஷயமல்ல. ஏனெனில், பூமி சூரியனை சுற்றி வர 1 வருடம் ஆகிறது எனில் நெப்டியூன் சூரியனை சுற்றிவர 164 ஆண்டுகள் ஆகும். அதாவது சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடையில் உள்ள தொலைவு சுமார் 450 கோடி கி.மீ. எனவே இந்த கோள் குறித்த தகவலை அவ்வளவு எளிதில் திரட்ட முடியாது. ஆனால் வெப் தொலைநோக்கி இதனை சாதித்து காட்டியுள்ளது.

நீல நிறம்

நீல நிறம்

நீல நிறத்தில் இருக்கும் இந்த கோள் பூமியை போலவே 17 மடங்கு எடையை கொண்டுள்ளது. இக்கோளின் வாயு மண்டலம் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டுள்ளதால்தான் இது நீல நிறத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் இக்கோளுக்கு 2 துணைக்கோள்கள் மட்டுமே இருக்கும் என கருதப்பட்ட நிலையில் தற்போது இதற்கு 14 துணை கோள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 துணைக்கோள்களை வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது.

இந்த கோளை குறித்து அறிந்துகொள்ள ஒரு காலத்தில் 144 ஆண்டுகள் காத்திருந்த நிலையில், தற்போது இக்கோளின் மெல்லிய வளையங்களையும் சேர்த்து வெப் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியுள்ளது அனைவரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

English summary
The last planet of the solar system, Neptune, has been clearly imaged by the James Webb telescope. This picture is currently going viral on social media. After nearly 30 years, the planet Neptune has been photographed with its rings, according to NASA. Earlier in 1989 Voyager 2 imaged Neptune with rings. Neptune is the last planet in the solar system, so it is not easy to find. But now the James Webb telescope has captured its thin rings, revealing the telescope's potential.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X