அமெரிக்காவில் மூன்றாவது முறையாக அதிபராக டிரம்ப் விரும்புகிறார்... சட்ட திருத்தம் சாத்தியமா?
நியூயார்க்: 79 வயதாகும் டிரம்ப் அமெரிக்காவில் மூன்றாவது முறையாக அதிபராக விரும்புகிறார். ஆனால் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தத்தின்படி யாரும் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது . அதாவது ஒருவரை இரண்டு முறைக்கு மேல் அதிபராக தேர்வு செய்யவே முடியாது.. அதற்கு சட்ட திருத்தம் செய்ய முடியும் என்றாலும், அது நடைமுறையில் அவ்வளவு எளிதான காரியம் அல்ல.. 3ல் இரண்டு பங்கு மெஜாரிட்டி வேண்டும். அத்துடன் 50 மாநிலங்களில் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்கொரியா செல்கிறார். அங்கு செல்லும் முன்பாக தமது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, அதிபராக மீண்டும் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்
அதற்கு டிரம்ப் பதில் அளிக்கையில், "நான் உண்மையில் அதை பற்றி யோசிக்கவே இல்லை. இதுவரை நான் பெற்ற ஓட்டு சதவீதத்தில் இப்போது அதிக ஓட்டு சதவீதம் பெற்றிருக்கிறேன். எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அமெரிக்காவின் சட்டம் 3வது முறையாக ஒருவர் அதிபராக போட்டியிடுவதை தடை செய்கிறது. இது மிகவும் மோசமானது " இவ்வாறு கூறினார்.

டிரம்பின் ஆலோசகர்
முன்னதாக கடந்த வாரம் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பான்சன், பேட்டி ஒன்றில் டிரம்பை 3வது முறையாக அதிபராக பதவியேற்க செய்யும் திட்டமிருப்பதாக கூறியிருந்தார். அதே சமயத்தில், சபாநாயகர் மைக் ஜான்சன், அரசியலமைப்பை திருத்த தனக்கு எந்த வழியும் தெரியவில்லை. அதை திருத்தம் செய்ய எப்படியும் 10 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்தார்.
டிரம்ப் ஆசை நிறைவேறுவதில் உள்ள சிக்கல்
இந்நிலையில் அமெரிக்க அரசியலமைப்பின்படி, டொனால்ட் டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபராகப் போட்டியிட இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. எனினும் சட்டத்திருத்தம் செய்தால் அது கோட்பாட்டளவில் சாத்தியமாகும். அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்தம் அதிபரின் பதவிக் காலத்தை தெளிவாக வரம்புக்குட்படுத்துகிறது. எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. டிரம்ப் ஏற்கெனவே ஒரு முழுப் பதவிக் காலத்தில் அதிபராக பணியாற்றியுள்ளார். அவர் 2024 தேர்தலில் வெற்றி பெற்றதால், அது அவருடைய இரண்டாவது பதவிக் காலமாக இருக்கிறது. எனவே 2028ம் ஆண்டு தேர்தலில் அவரால் மீண்டும் போட்டியிட முடியாது.
மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி
டிரம்ப் மீண்டும் போட்டியிட ஒரே வழி, இந்த 22வது திருத்தத்தை நீக்குவது அல்லது திருத்துவது தான். இது கோட்பாட்டளவில் சாத்தியம் என்றாலும், ஆனால் நடைமுறையில் மிகவும் கடினமான, கிட்டத்தட்ட நடக்கவே சாத்திமில்லாத செயல்முறையை கொண்டது. அதற்கு அமெரிக்க அரசியலமைப்பைத் திருத்த வேண்டும். அந்த திருத்தத்தை முதலில் அமெரிக்க நாடாளுமுன்ற இரு அவைகளிலும் (செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை) உள்ள மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். அதன்பின், திருத்தம் அமெரிக்காவில் உள்ள 50 மகாணாங்களில் மூன்றில் இரண்டு பங்கு மாநிலச் சட்டமன்றங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
சாத்தியமே இல்லை
இந்த விதிமுறைகள் காரணமாக, டிரம்ப் என்ற ஒற்றை நபருக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ள ஒரு சட்டத்தை மாற்றுவது என்பது, அமெரிக்காவின் இரண்டு முக்கியக் கட்சிகள் மற்றும் பெரும்பான்மையான மாநிலங்களின் ஆதரவின்றி சாத்தியமே இல்லை. தற்போதைய நிலையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், டிரம்ப் மூன்றாவது முறையாகப் போட்டியிட அனுமதிக்கும் வகையில் 22வது திருத்தத்தை நீக்குவதற்கான தீர்மானங்களை அறிமுகப்படுத்தினார்கள். இருப்பினும், இந்த முயற்சிகள் வெறும் அடையாளப்பூர்வமானவை மட்டுமே.. அந்நாட்டு நாடாளுமன்றத்திலோ அல்லது மாகாணங்களிலோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இந்தியாவில் எப்படி
இந்தியாவை பொறுத்தவரை பிரதமராக, முதல்வராக ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பதவி வகிக்கலாம் என்று உள்ளது. எனவே இந்தியாவில் எந்த சிக்கலும் அரசியல்வாதிகளுக்கு இல்லை.. அதேநேரம் இந்த முறை வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. தொடர்ந்து வாரிசு அரசியல் பல மாநிலங்களில் நிலவ இந்த முறை காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications