அம்மானா சும்மா இல்ல! இறந்த குட்டியை 2 நாளாய் தூக்கி சுமந்த தாய் குரங்கு! நெஞ்சை உருக்கும் காட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கல்லட்டி அருகே உள்ள வனப்பகுதியில் குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு அதனை சுமார் 2 நாட்களுக்கும் மேலாக மார்போடு அணைத்தவாறு சுமந்து சுற்றித்திரிந்து வரும் காட்சிகள் காண்போர் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.

Recommended Video

    அம்மானா சும்மா இல்ல! இறந்த குட்டியை 2 நாளாய் தூக்கி சுமந்த தாய் குரங்கு! - வீடியோ

    நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் காடுகளை கொண்டுள்ளதால் இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக குரங்குகள் அதிகளவில் உள்ளன.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையில் செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை சாலையிலே அமர்ந்து விடுகின்றன.

     குரங்குகள்

    குரங்குகள்


    இதனால் அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டும் எவ்வித பயனும் இல்லை.

     குட்டி இறந்தது

    குட்டி இறந்தது

    சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி நீலகிரியில் உள்ள பொதுமக்களும் தொடர்ந்து குரங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கல்லட்டி பகுதியில் குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு அதனை சுமந்து கொண்டு சுற்றித்திரிந்து வருகிறது.

    குரங்கின் பாசப்போராட்டம்

    குரங்கின் பாசப்போராட்டம்


    கூட்டத்தோடு சுற்றி திரியும் அந்த தாய் குரங்கின் பாசப்போராட்டம், பார்ப்போரை கவலை அடைய வைத்துள்ளது. இந்த சிலர் தங்களது செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி வேகமாக பரவி வருகிறது.

    நெகிழ்ச்சி

    நெகிழ்ச்சி

    தன் குட்டி இறந்ததுகூட தெரியாமல் அந்த தாய் குரங்கு அதனை தூக்கி வைத்து மார்போடு அணைத்து கொண்டே இருந்தது. இந்த பாசப்போட்டத்தினை கண்டு பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வரும் நிலையில், குரங்காக இருந்தாலும், நாயாக இருந்தாலும் தாய்ப்பாசம் என்பது அனைத்தும் உயிரினங்களுக்கும் பொதுவானதுதானே..

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+