5 மணி நேரம்.. சேலத்து புள்ளியை கோர்த்துவிட்ட மருது.. டக்கென திரும்பிய பார்வை - எடப்பாடிக்கு சிக்கல்?
நீலகிரி : கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், இன்று தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு ஆஜரான மருது அழகுராஜ், சேலம் இளங்கோவனை விசாரிக்க வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவரான சேலம் இளங்கோவன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மருது அழகுராஜிடம் இன்று சுமார் 5 மணி நேரம், தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இந்த விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரான தகவல்கள் தனிப்படை போலீசாருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கோடநாடு மர்மம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மர்ம கும்பல் நுழைந்து, கோடநாடு பங்களா காவலாளி ஓம் பகதூரை கொலை செய்ததுடன், எஸ்டேட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் சசிகலா, முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அதிமுக வர்த்தகர் அணி நிர்வாகியும் மர வியாபாரியுமான சஜீவன், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மருது அழகுராஜ்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான சேலம் இளங்கோவன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவரை சந்தித்து உண்மைச் சம்பவங்களை நீர்த்துப் போகச் செய்வதற்காக பேரம் பேசியதாக வெளியான தகவல்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று 'நமது அம்மா' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், ஜெயலலிதாவின் உரையாசிரியருமான மருது அழகுராஜ் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆஜராக உத்தரவு
இந்நிலையில், அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும், நமது அம்மா நாளேட்டின் ஆசிரியராக இருந்தவருமான மருது அழகுராஜுக்கு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். தனிப்படை போலீசாரின் அழைப்பை ஏற்று இன்று ஆஜராகப்போவதாக மருது அழகுராஜ் தெரிவித்த நிலையில், இன்று நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.

5 மணி நேரம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மருது அழகுராஜிடம் 5 மணி நேரமாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. எடப்பாடி பழனிசாமியின் நண்பரான சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவனையும் தனிப்படை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று மருது அழகுராஜ் கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கோடநாடு மர்மம் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டவர்களையும் தனிப்படை போலீசார் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

மருது அழகுராஜ் பேட்டி
மருது அழகுராஜிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணைக்குப் பிறகு பேட்டியளித்த அவர், "கோடநாடு வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் அடிப்படையில் விசாரணை விரிவுபடுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான சேலம் இளங்கோவனையும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அனுப்பிய நோட்டீஸை ஏற்று இன்று விசாரணைக்கு ஆஜராகினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

சேலம் இளங்கோவன்
கோடநாடு பங்களாவில் எடுக்கப்பட்ட சில முக்கிய ஆவணங்களை சேலம் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் மூலமாக சேலம் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ஒருவரிடம் கனகராஜ் ஒப்படைத்திருக்கிறார். அதன் பின்னரே கனகராஜ் கார் விபத்தில் மரணமடைந்தார் என ஒரு தகவல் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருது அழகுராஜ் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் விரைவில் சேலம் இளங்கோவன் விசாரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

எடப்பாடிக்கு சிக்கல்
எடப்பாடி பழனிசாயின் நிழலாக வலம் வருபவர் சேலம் இளங்கோவன். இதனால், எடப்பாடி பழனிசாமிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதற்கிடையே, அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் ஓபிஎஸ்ஸூக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட்டால் அது அவருக்குப் பின்னடைவாகும் என்பதால் சேலம் இளங்கோவன் மீதான விசாரணை பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி போட்ட 3 கண்டிஷன்? தஞ்சையில் தினகரன் சொன்ன 1 விஷயம்.. உடைந்தது அரசியல் மர்மம் -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க!












Click it and Unblock the Notifications