Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி போறவங்க -0 டிகிரி உறைபனியில் பத்திரம்.. குன்னூருக்குள் நுழைந்ததுமே உருகுதே, மருகுதே, குளிருதே

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் உறை பனிப்பொழிவு காலம் என்பதால் அங்கு நேற்று முதல் கடும் உறைபனி கொட்டி தீர்த்து வருகிறது... சில நாட்களுக்கு முன்பு ஊட்டியை விட உயரம் குறைவான பகுதியான குன்னூரில் அதிகமாக குளிர் ஏற்பட்ட நிலையில், தற்போது உறைபனியும் குன்னூரில் கொட்டி வருகிறது.. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்..

ஒருபுறம் தொடர் மழை, மறுபுறம் கடும் உறைபனி, இதற்கிடையில் கண்ணுக்குத் தெரியாத தொற்று என்ற மூன்று விதமான இயற்கை தாக்கங்களை ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறது நீலகிரி மலைமாவட்டம்.

Nilgiris Coonoor Freezing Cold

ஊட்டி கடுங்குளிர்

இந்த சூழ்நிலை காரணமாக, மலையரசியான ஊட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அன்றாட வாழ்க்கை சவாலாக மாறியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உறைபனி காலம் நிலவுவது வழக்கம். அதன்படி நேற்று முதல் குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உறைபனி பெய்து வருகிறது.

குன்னூரில் உறைபனி

குறிப்பாக குன்னூர், கொலக்கம்பை, சேலாஸ், கரும்பாலம், சின்ன கரும்பாலம், ஜிம்கானா, குன்னகம்பை உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புல்வெளிகள், நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் பச்சைக் கம்பளத்தில் முத்துக்கள் கொட்டியதுபோல் வெண்மையாக உறைபனி படர்ந்தது.

சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், வீடுகளின் கூரைகள் மற்றும் தோட்டங்கள் அனைத்திலும் உறைபனி தெளிவாகக் காணப்பட்டது.

குன்னூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி பயிர்கள் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளித்தன. பனியின் தாக்கம் மேலும் அதிகரித்தால் தேயிலை செடிகள் மற்றும் மேராக்காய் பந்தல்கள் கருகும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

-0 டிகிரி செல்சியஸ் குளிர்

இரவு நேரங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்ததால், அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் போர்வை, சால்வை அணிந்து வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கடும் குளிரால் அவதியடைகின்றனர்.

மேலும், குன்னூரில் பகல் நேரங்களிலும் குளிர் வாட்டுவதால், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் தீ மூட்டி குளிர் காயும் நிலை ஏற்பட்டுள்ளது.

காலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி மலைப்பாதைகளில் வாகன ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாததால், முகப்பு விளக்குகளை பயன்படுத்தி மித வேகத்தில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஊட்டியில் குளிர்

நீலகிரியை பொறுத்தவரை, நவம்பர் மாதமே குளிர் துவங்கிவிடும்.. இந்த ஆண்டு நவம்பர் இறுதியில் ஆரம்பித்த குளிர், டிசம்பர் மாதமும் நீடித்த நிலையில், தற்போது உறைபனிக்குள் சிக்கியுள்ளது நீலகிரி.. சாயங்கால நேரங்களில் சீக்கிரமாகவே சாலைகள் வெறிச்சோடி விடுகின்றன.. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருமே கடும் குளிரால் நடுநடுங்கும் சூழல் உள்ளது..

சாலைகளில் வரும் வாகனங்களும், பனிமூட்டத்தில் தெளிவாக தெரிவதில்லை. புல்வெளிகளில் சாம்பல் நிறத்தில் பூத்து போயுள்ளன.. தார் ரோடுகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனி காணப்படுகிறது.. இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களிலும், பனி மூழ்கிவிடுகிறது.

நீலகிரியின் நுழைவுவாயில் பகுதியான குன்னூரில், விடிய விடிய பனி கொட்டுகிறது.. இதனால், மந்தமான கால நிலை நிலவி கொண்டிருக்கிறது.. குன்னூர் - மேட்டுபாளையம் ரோட்டில், வாகன ஓட்டிகள், வண்டிகளில் லைட்டுகளை ஒளிர விட்டபடியே மெதுவாக ஓட்டிச் செல்கிறார்கள்..

நீலகிரி சுற்றுலா பயணிகள்

உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களிலிருந்து வெளியே வராமல் முடங்கி கிடக்கிறார்கள். காலை நேரங்களில் தங்கும் விடுதிகளில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்..

எப்படியும் இந்த மாத இறுதிவரை உறைபனி நீடிக்கலாம் என்பதால், பிப்ரவரி மாத துவக்கத்திற்கு பிறகே, இந்த உறைபனியின் தீவிரம் குறைந்து மாவட்ட மக்களும் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று நம்பப்படுகிறது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+