தேர்தல் பணியின்போது பெண் காவலரிடம் சில்மிஷம்.. துணை தாசில்தாரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேர்தல் பணியின் போது பெண் போலீஸிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட துணை வட்டாட்சியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேர்தல் பணிகளில் பெண் போலீசை ஈடுபடுத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் சோதனை
இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர மாநில தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள மாவட்டத்தில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் போலீசிடம் சில்மிஷம்
இந்த நிலையில் உதகை அருகே உள்ள அதிகரட்டி பகுதியில் பறக்கும் படை குழுவினர், ரோந்து பணியில் இருந்தபோது பெண் காவலர் ஒருவரிடம் துணை வட்டாட்சியர் பாபு என்பவர் சில்மிஷம் செய்துள்ளார். இதையடுத்து பெண் காவலர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் துணை வட்டாட்சியர் பாபுவை பிடித்தனர்.

சிறையில் அடைத்தனர்
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது பெண் காவலரிடம்,வட்டாட்சியர் சில்மிஷம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டத்தின் கீழ் துணை வட்டாட்சியர் பாபுவை கைது செய்து குன்னூர் சிறையில் அவரை அடைத்தனர்.

பெண் போலீசுக்கு விலக்கு வருமா?
தேர்தல் பணியின் போது பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தேர்தல் பணிகளில் பறக்கும் படையினரின் வேலை இரவு நேரங்களில்தான் அதிகமாக இருக்கும். பெண் போலீஸ் இரவு நேரத்தில் இந்த பணிகளில் ஈடுபடுவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே தேர்தல் பணிகளில் பெண் போலீசை ஈடுபடுத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications