பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒற்றைக்காலில் தாவி குதித்து பள்ளி செல்லும் சிறுமி.. உதவ முன்வந்த நடிகர் சோனு சூட்

ஒற்றைக்காலில் குதித்துக்கொண்டு பள்ளிக்குப் போகும் மாணவி சீமாவிற்கு செயற்கை கால் பொருத்த தாம் உதவி செய்ய தயாராக இருப்பதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பாட்னா: ஒற்றை காலில் தினமும் குதித்தவாறு 1 கிமீ தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் சிறுமிக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்கு உதவுகிறேன் என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். நான் டிக்கெட் அனுப்புகிறேன். இரண்டு கால்களிலும் அவள் நடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார் சோனு சூட்.

Recommended Video

    ஒற்றைக்காலில் தாவி குதித்து பள்ளி செல்லும் சிறுமி..

    பீகாரின் ஜமுய் நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி சீமா குமாரி. துறு துறுவென விளையாடிக்கொண்டிருந்த சிறுமியின் வாழ்க்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு விதி விளையாடியது. தனது சொந்த கிராமமான ஃபதேபூரில் டிராக்டரின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி விபத்தில் சிக்கினார் சீமா.

    கால் நசுங்கியதில் துடிதுடித்தார். மருத்துவமனையில் சிகிச்சையின்போது காயமடைந்த இடது கால் துண்டிக்கப்படாவிட்டால், அவள் உயிரிழக்க நேரிடும் என மருத்துவர்கள் சீமாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர். சீமாவின் உயிரே முக்கியம் என முடிவு செய்து ஒரு காலை எடுக்க சம்மதித்தனர். இதனையடுத்து இடது காலை நீக்கி சீமாவின் உயிரை காப்பாற்றினர் மருத்துவர்கள்.

    'இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்'..பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து நடிகர் சோனு சூட் கருத்து'இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்'..பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து நடிகர் சோனு சூட் கருத்து

    நம்பிக்கை இழக்காத சீமா

    நம்பிக்கை இழக்காத சீமா

    ஒரு காலை இழந்தபோதும், சீமா தனது நம்பிக்கையை இழக்கவில்லை. ஒற்றைக் காலுடன் தாவி தாவி குதித்தவாறே தன் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும் சென்று வருகிறார்.
    சீமா பள்ளிக்கு ஒற்றைக் காலில் குதித்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

    ஆசிரியராக விருப்பம்

    ஆசிரியராக விருப்பம்

    நான் படித்து ஆசிரியராக விரும்புகிறேன். அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதே என் குறிக்கோள் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் சீமா. இதையடுத்து ஜமுய் மாவட்ட ஆட்சியர் அவனிஷ் குமார் சீமாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு மூன்று சக்கர வண்டி ஒன்றை வழங்கினார்.

    சோனு சூட் உதவி

    சோனு சூட் உதவி

    இந்நிலையில் சீமாவிற்கு செயற்கை கால் பொருத்த தாம் உதவி செய்ய தயாராக இருப்பதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இப்பொழுதெல்லாம் ஒன்றல்ல... இரண்டு கால்களில் குதித்துக்கொண்டு பள்ளிக்குப் போவாள். நான் டிக்கெட் அனுப்புகிறேன். இரண்டு கால்களிலும் நடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

    உதவும் நடிகர்

    உதவும் நடிகர்

    கொரோனா நேரத்தில், பல புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், என பலர்க்கு உதவிகள் செய்தார் நடிகர் சோனுசூட். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Seema can be seen going to school by covering one kilometer on her barefoot. Seeing Seema's enthusiasm and her desire to study, the organisation of film actor Sonu Sood has also expressed a desire to help. Now she will go to school by jumping on not one but both feet. I am sending the ticket, the time has come to walk on both feet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X