• search
பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஆணுறை".. இப்போ இதை கேட்பீங்க.. அப்பறம் அதுவா?.. பெண் அதிகாரியின் அநாகரீக பேச்சு.. நெளிந்த மாணவிகள்

Google Oneindia Tamil News

பாட்னா: ஒரு மாணவியின் கேள்விக்கு, எப்படி பதில் சொல்வது என்றுகூட தெரியாமல் அநாகரீகத்தின் உச்சத்திற்கு போயுள்ளார் ஒரு அதிகாரி.. இத்தனைக்கும் இவர் ஒரு பெண் அதிகாரி..!
பீகார் ஒரு கருத்தரங்கம் நடந்தது.. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழக தலைவரான ஹர்ஜோத் கவுர் பாம்ரா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.. பாம்ரா ஒரு ஐஏஎஸ் அதிகாரியும்கூட..

 அசோக் கெலாட் மீது அதிருப்தி.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் கவனத்தை பெறும் 3 தலைவர்கள்! அசோக் கெலாட் மீது அதிருப்தி.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் கவனத்தை பெறும் 3 தலைவர்கள்!

 கருத்தரங்கு

கருத்தரங்கு

இந்த கருத்தரங்கில் பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடி கொண்டிருந்தார் பாம்ரா.. அப்போது ஒரு பள்ளி மாணவி எழுந்து நின்று, "மலிவான விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்களை அரசு வழங்க முடியுமா? என்று கேட்டார்.. இதற்கு பாம்ரா பதிலளிக்கும்போது, 'நாளைக்கே நீங்கள் எல்லாம் ஜீன்ஸ் பேண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள்.. அதை கொடுத்தால், ஏன் அழகான ஷூக்கள் எங்களுக்கு தரக்கூடாதா? என்று கேட்பீர்கள்.. கடைசியில் குடும்ப கட்டுப்பாடு முறைகள், ஆணுறைகள் இதையெல்லாம் அரசாங்கம் தருமென்று எதிர்பார்ப்பீர்கள்" என்று சொன்னார்..

 ஐஏஎஸ் ஆபிசர்

ஐஏஎஸ் ஆபிசர்

இப்படி ஒரு பதிலை அங்கிருந்தோர் யாருமே எதிர்பார்க்கவில்லை.. அந்த கருத்தரங்கில் ஏராளமான சிறுமிகள், இந்த பதிலை கேட்டு நெளிந்தனர்.. எனினும் கேள்வி எழுப்பிய அந்த மாணவி விடவில்லை, மறுபடியும் ஒரு கேள்வியை கேட்டார்.. ஓட்டு போடுவது மக்கள்தானே? இந்த ஓட்டுகள்தானே அரசை உருவாக்குகிறது? என்றார்.. இந்த கேள்விக்கும் ஏடாகூடமாகவே பதில் சொன்னார் பாம்ரா..

முட்டாள்தனம்

முட்டாள்தனம்

"இதெல்லாம் முட்டாள்தனம்.. அப்படி நீங்கள் நினைத்தால் ஓட்டு போடாதீங்க.. நீங்களும் பாகிஸ்தான் போல மாறிடுங்க.. பணத்திற்காகவும், சேவைகளுக்காகவும் ஓட்டு போடுகிறீர்களா? எதுவாக இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து ஏன் அவைகளை பெறவேண்டும்? இப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதே தவறான எண்ணம்.. உங்கள் தேவை என்னவோ, நீங்களே பூர்த்தி செய்யுங்கள் என்றார் பாம்ரா. பாம்ராவின் இந்த பேச்சு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது..

 மென்சுரல் கப்

மென்சுரல் கப்

பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் திட்டத்தை நாட்டிலேயே கேரள மாநிலம்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது.. அதுபோல, மாதவிடாய் கோப்பைகள் என்று சொல்லக்கூடிய மென்சுரல் கப் (menstrual வழங்கப்பட்டு வருகிறது. இதனால், நாட்டிலேயே முதல் சானிடரி நாப்கின் இல்லாத கிராமம் என்ற பெருமையை கேரளாவில் உள்ள கும்பலாங்கி என்ற கிராமம் பெற்றுள்ளது.. பள்ளி மாணவிகளின் நலனுக்காக, கேரள மாநிலம் எத்தனையோ முன்னெடுப்புகளை செய்து வரும் நிலையில், அரசு அதிகாரி, அதிலும் ஒரு பெண் அதிகாரி, முகம் சுளிப்பது போல பதிலை மாணவிகளிடம் கூறியுள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 9th 10th மாணவிகள்

9th 10th மாணவிகள்

இத்தனைக்கும் இந்த கருத்தரங்கில், பெரும்பாலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகள்தான் அதிகம் பங்கேற்றார்களாம்.. பாம்ரா பேசிய பேச்சுதான் இணையத்தில் வீடியோவாக வைராகி கொண்டிருக்கிறது.. ஆனால், பாம்ரா தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார்.. தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வதாக சொல்கிறார்.. அதுமட்டுமல்ல, பெண்களுக்காக குரல் கொடுப்பவள் நான், பெண்கள் உரிமைகள், அதிகாரங்களை பெறுவதற்காக போராடி கொண்டிருக்கிறேன்.. என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற கீழ்த்தரமான முயற்சிகளில் சிலர் இறங்கியுள்ளனர்' என்கிறார் பாம்ரா. ஆனாலும், பாம்ரா பேசிய வீடியோ, அதிகமாக பரவி, இணையவாசிகளுககு கடுப்பை தந்து கொண்டிருக்கிறது..!

English summary
condoms: Bihar womens panel chief on students request for sanitary pads
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X