ஒடிசா முதல்வரின் செயலாளர் விகே பாண்டியனுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு விருது
2வது முறையாக உலககோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசா வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதனை பாராட்டி ஒடிசா முதல்வரின் செயலாளரான தமிழகத்தை சேர்ந்த விகே பாண்டியனுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு விருது வழங்கப்பட்டுள்ளது
பாட்னா: 2வது முறையாக உலககோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசா வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இதனை பாராட்டி ஒடிசா முதல்வரின் செயலாளரான தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியனுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் பிரசிடென்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஜனவரி 13ல் ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் துவங்கின. நேற்று முன்தினத்துடன் இந்த போட்டிகள் நிறைவு பெற்றன. மொத்தம் 4 பிரிவுகளாக அணிகள் பங்கேற்று விளையாடின.
லீக் சுற்று, அரையிறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதி போட்டியில் பெல்ஜியம், ஜெர்மனி அணிகள் மோதின. இதில் பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தியாவில் உலககோப்பை ஹாக்கி போட்டிகள்
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ஆடவருக்கான உலககோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் நடைபெற்றது தான். தொடர்ந்து 2வது முறையாக இந்தியாவில் உலககோப்பை ஹாக்கி போட்டி நடந்துள்ளது. கடந்த 2018ல் ஒடிசா மாநிலத்தில் ஹாக்கி போட்டிகள் நடந்த நிலையில் தற்போது 2வது முறையாக அங்கேயே ஹாக்கி போட்டிகள் நடந்துள்ளன. இது இந்தியாவுக்கு பெருமையான தருணமாக உள்ளது. இந்த முறை ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா மைதானங்களில் போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்தது.

விகே பாண்டியனுக்கு விருது
இந்நிலையில் தான் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டாக உலககோப்பை ஹாக்கி போட்டியை நடத்தியதை பாராட்டி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் பிரசிடென்ட் விருது வழங்கப்பட்டது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் 5T செயலாளராக உள்ள விகே பாண்டியனுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தலைவர் தயப் இக்ராம் விருது வழங்கினார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஜனாதிபதி விருது என்பது ஹாக்கி போட்டிக்காக சிறப்பான பங்களிப்பு செய்த தனிநபர், தேசிய சங்கங்களை பாராட்டி வழங்கப்படும் விருதாகும்.

முக்கிய பங்காற்றிய விகே பாண்டியன்
இதுபற்றி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் தயப் இக்ராம் பேசுகையில், ‛‛ கடந்த 2 வாரங்களாக ஒடிசாவில் அதிநவீன வசதிகளுடன் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் சிறப்பாக நடந்து முடிந்தன. ஹாக்கியின் மீது ஒடிசா மக்கள் வெளிப்படுத்திய ஆர்வம் சிறப்பானதாக உள்ளது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து பாண்டியன் இந்த உலககோப்பை போட்டியை உலகளவில் வெற்றிக்கரமாக நடத்த முக்கிய பங்காற்றியுள்ளது. அவரது தனிப்பட்ட ஆதரவு மற்றும் ஒடிசா மாநிலத்தின் ஆதரவுக்காக நானும், சர்வேதச ஹாக்கி கூட்டமைப்பும் நன்றியுணர்வுடன் இருப்போம். இந்த நன்றியின் வெளிப்பாடாக ஜனாதிபதியின் விருதை பாண்டியனுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன்'' என்றார்.

நான் மட்டுமே இல்லை
இந்த விருது பெற்றவுடன் விகே பாண்டியன் பேசுகையில், ‛‛சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரிடம் இருந்து விருது பெற்றதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த விருது பெற நான் மட்டும் தகுதிப்படைத்தவன் இல்லை. இந்த உலகக் கோப்பையை மகத்தான வெற்றியடைய செய்ததில் அதீத கவனம் செலுத்திய ஒடிசா மாநிலத்தின் பிரநிதி தான் நான். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தொலைநோக்கு பார்வையால் இது சாத்தியாமாகி உள்ளது'' என்றார்.

வியந்து பார்ப்பதாக பெருமை
இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் திலீப் டிர்கி கூறுகையில், ‛‛கடந்த 20 ஆண்டுகளாக விளையாட்டு துறையில் சாதித்து வருகிறோம். குறிப்பாக ஹாக்கியில் பாண்டியனின் பங்களிப்பை நான் பார்த்து வருகிறேன். அவர் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் தேவைகளைப் புரிந்துகொண்டு சிறப்பான ஏற்பாடுகளையும், வசதிகளை வழங்க தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். ஒடிசாவை விளையாட்டுக்கான முக்கிய இடமாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் நினைக்கிறார். இது சிறப்பானதாகும்'' என்றார்.
எழுதியவர்: ஒடிசா முதல்வரின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் & ஐடி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர் மனோஜ் மிஸ்ரா.
தொடர்புக்கு: [email protected]
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications