பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"எவ்வளவு காலம் கட்சியில் தாக்குப்பிடிப்பீர்கள்?" அசோக் கெலாட் கேள்வி.. நறுக் பதிலடி தந்த பிகே

Google Oneindia Tamil News

பாட்னா: தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று கூறப்படும் நிலையில், தலைமை உடன் நடைபெற்ற ஆலோசனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Congress கட்சியில் இணையும் Prashant Kishore? | Oneindia Tamil

    கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியால் தேர்தலில் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற முடியவில்லை. சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் கூட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.

    சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்! 234 தொகுதிகளிலும் ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்கங்கள்! சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்! 234 தொகுதிகளிலும் ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்கங்கள்!

    இதையடுத்து காங்கிரஸ் தலைமை மீதான அழுத்தம் மீண்டும் அதிகரித்து உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல்வேறு தலைவர்களும் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

     பிரசாந்த் கிஷோர்

    பிரசாந்த் கிஷோர்

    இந்தச் சூழலில் தான் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் போது, அவர் 2024 மக்களவை தேர்தலுக்கான திட்டத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. பிகே முன்மொழிந்துள்ள திட்டம் குறித்து காங்கிரஸ் தலைமை பல்வேறு கட்டங்களாகத் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை விரைவில் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     தீவிர ஆலோசனை

    தீவிர ஆலோசனை

    காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்யவும் எதிர்கால தேர்தல் வியூகம் குறித்தும் பிகே முன்மொழிந்துள்ள திட்டத்தை ஆராயக் காங்கிரஸ் தலைவர்களைக் கொண்ட குழுவைச் சோனியா காந்தி நியமித்துள்ளார். இந்த குழுவில் ராகுல் காந்தி இல்லை. அதேநேரம் அவரது சகோதரி பிரியங்கா காந்தி இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார். கடந்த வாரம், பிகே முதல் முறையாகக் காங்கிரஸ் தலைமை உடன் ஆலோசனை நடத்தி போது, அவரது திட்டத்தின் ஒரு பகுதி காங்கிரஸ் இரு முதல்வர்களான அசோக் கெலாட் மற்றும் பூபேஷ் பாகேல் ஆகியோரிடம் விளக்கப்பட்டது.

     பளீச் பதிலடி

    பளீச் பதிலடி

    இதையடுத்து சில நாட்களுக்குப் பின்னர், நடந்த இரண்டாவது சந்திப்பில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பிரசாந்த் கிஷோரை அவர் கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார். ஏற்கனவே, ஐக்கிய ஜனதாளம் கட்சியில் சில ஆண்டுகள் மட்டும் இருந்ததைக் குறிப்பிட்ட அசோக் கெலாட், "காங்கிரஸில் எத்தனை காலம் இருக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார், அதற்குச் சற்றும் தாமதிக்காமல் பிகே, "நீங்கள் நான் சொல்வதை எவ்வளவு கேட்கிறீர்களோ அதைப் பொருத்து" பதிலடி கொடுக்கும் வகையில் பேசி உள்ளார்.

     இறுதி முடிவு

    இறுதி முடிவு

    பிகே பிற தலைவர்கள் உடன் மீட்டிங் நடத்தினாலும் அவர் கட்சியில் சேருவாரா என்பது தொடர்பான இறுதி முடிவைச் சோனியா காந்தி மட்டுமே எடுப்பார் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங். மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "மூத்த தலைவர்கள் உடன் ஏற்கனவே ஆலோசனை முடிந்துவிட்டது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எந்தவொரு குழுவும் எடுக்காது. சோனியா காந்தி எடுக்கும் முடிவே இந்த விவகாரத்தில் இறுதியானது" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

     திட்டம் என்ன

    திட்டம் என்ன

    இந்த ஆண்டு இறுதியில் மற்றும் அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் ஹிமாச்சல பிரதேசம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களைக் குறி வைத்து காங்கிரஸ் பணியாற்ற வேண்டும் என்பதே பிகேவின் முக்கிய திட்டமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில், பிகேவின் வருகை அக்கட்சிக்கு பூஸ்ட் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Election strategist Prashant Kishor third meeting with Sonia Gandhi in the two days: (காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடன் பிரசாந்த் கிஷோர் தீவிர ஆலோசனை) Will Prashant Kishor join in congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X