புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோயம்பேடு சந்தையில் இருந்து புதுவை திரும்பிய லாரி ஓட்டுநருக்கு கொரோனா

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கோயம்பேடு சந்தையில் இருந்து புதுச்சேரிக்கு திரும்பிய லாரி ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவமனைகளில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேரும், தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஏற்கனவே 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

Coroner virus infection confirmed to truck driver in Puducherry

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து சென்றவர்களால் தமிழகத்தில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு லாரிகளில் சரக்கு ஏற்றிச் சென்ற புதுச்சேரி லாரி டிரைவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக கமல் ஹாசனின் மநீம வழக்கு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக கமல் ஹாசனின் மநீம வழக்கு

அதில் தற்போது புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து அவர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

Coroner virus infection confirmed to truck driver in Puducherry

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உள்ளதால் புதுச்சேரி பகுதிக்குள் தமிழக மக்கள் நுழைவதை தடுக்க கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம், திருக்கனூர் ஆகிய எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்கு வருவோர், பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மட்டுமே தீவிர சோதனைக்கு பிறகு புதுச்சேரிக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

English summary
Coroner virus infection confirmed to truck driver in Puducherry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X