"தொலைத்துவிடுவேன்... ஜாக்கிரதை' மிரட்டிய நாராயணசாமி.. பதறிய போலீஸ்.. புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி போராட்டத்தின் போது, எல்லை மீறியதாக கூறப்படும் காவல்துறை அதிகாரியை பார்த்து, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தொலைத்துவிடுவேன், ஜாக்கிரதை என்று மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மிநேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் நடைபெற்ற போராட்டம்
இதன் ஒருபகுதியாக புதுச்சேரி மாநில மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் காந்தி வீதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டதால், போராட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திடீரென தள்ளுமுள்ளு
சுமார் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் பங்கேற்ற இந்தப் போராட்டத்தின் போது, காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென வருமான வரித்துறை அலுவலகத்திற்குள் புகுந்து செல்ல முயற்சித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மிரட்டிய நாராயணசாமி
போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வருமான வரித்துறை அலுவலகம் முன் புக முயற்சித்த போது, அங்கு வந்த பெரிய கடை காவல் ஆய்வாளர் கண்ணன், சக போலீசாரை பார்த்து தடுப்பு கட்டைகளை அமைக்காதது ஏன் என திட்டியுள்ளார். போலீஸ் அதிகாரி தங்களை திட்டுவதாக எண்ணிய காங்கிரஸ் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, போலீசாரை பார்த்து தவறான வார்த்தைகளை பயன்படுத்தினால் தொலைத்து விடுவேன். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என்று மிரட்டினார்.

பதறிய போலீஸ்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் மிரட்டலால், போலீஸார் சிறிது நேரம் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications