மத எல்லைகளை கடந்து வாழ்த்துக்களை பகிர வேண்டும்.. ஆனால் தமிழகத்திலோ.. புதுவை ஆளுநர் தமிழிசை ஆதங்கம்
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி இணைந்து கேக் வெட்டி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்பட விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கினர். இந்த விழாவிற்கு பிறகு பேசிய ஆளுநர், "வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் அதிகாரம் படைத்த இடத்தில் இருக்கும் நாங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மனமார தெரிவித்துகொள்கிறேன்" என்றார்.
புதுவை ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாப்பட்டது. இந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் பிரமாண்ட கேக்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும் இணைந்து வெட்டி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கினர்.

தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது:- வரும் புதிய ஆண்டு கொரோனா இல்லாத ஆண்டாக இருக்கவேண்டும். வரும் புதன்கிழமையில் இருந்து உருமாறிய கொரோனாவை கண்டறியும் மையம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது. கூட்டமாக இருக்கும் இடங்களில் கவனமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இருக்க வேண்டும் . அனைத்து வகையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வதந்திகளுக்கு இடமில்லை
எதையும் எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் மிக கவனமாக முககவசம் அணிய வேண்டும். கொண்டாட்டங்களில் எந்த வித கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் அமையப்போகின்றது இதில் எழும் வதந்திகளுக்கு இடமில்லை. மாநில அந்தஸ்து விவகாரம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். மாநிலத்திற்கான அனைத்து திட்டங்களும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் கிடைக்கும்.

வேறுமாடல் ஆட்சி புதுச்சேரிக்கு தேவையில்லை
சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் தமிழ்கட்டாயம் இருக்கும். தமிழை தமிழிசை நசுக்குகின்றார். என்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த விவகாரத்தை அரசியாலாக்க வேண்டாம். புதுச்சேரிக்குரூ.1400 கோடி மத்திய அரசு உதவி அளிக்கவுள்ளது. பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கும் கோப்பிற்கு ஒப்புதல் வழங்கியிருகின்றேன். வேறுமாடல் ஆட்சி புதுச்சேரிக்கு தேவையில்லை. தற்போது மாநில அந்தஸ்த்து விவகாரம் குறித்து பேசுவோர் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள்.

மத எல்லைகளை கடந்து
அப்போது ஏன் மாநில அந்தஸ்த்து கிடைக்க வழி வகை செய்யவில்லை. வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் அதிகாரம் படைத்த இடத்தில் இருக்கும் நாங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மனமார தெரிவித்துகொள்கிறேன், ஆனால் நான் சார்ந்து இருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுப்பதாக ஆதங்கம் எனக்கு இருக்கிறது, மத எல்லைகளை கடந்து வாழ்த்துகளை பகிரவேண்டும் அதுதான் மதசார்பற்றது. இவ்வாறு அவர் பேசினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications