புதுவை உலகழகி சான் ரேச்சல் தற்கொலைக்கு காரணம் என்ன? விசாரணையில் புதிய தகவல்!
புதுச்சேரி: நிறம் குறித்த விமர்சனங்களைப் புறந்தள்ளி, மாடலிங் துறையில் வெற்றி பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த அழகி சான் ரேச்சல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்களைக் காணலாம்.
புதுச்சேரி, காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரைச் சேர்ந்த காந்தி என்பவரின் மகள் சங்கரப்பிரியா (எ) சான் ரேச்சல் (25). மாடல் அழகியான இவர், 'மிஸ் புதுச்சேரி 2020', 'மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019', 'குயின் ஆஃப் மெட்ராஸ் 2022' மற்றும் 'மிஸ் ஆஃப்ரோ கோல்டன் இந்தியா 2023' உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை வென்றவர்.

இவர், புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஜான்சி நகரைச் சேர்ந்த சத்யா என்பவரைக் காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான முதலே கணவன்-மனைவி இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் 6-ஆம் தேதி இரவு, சான் ரேச்சல் அதிக அளவில் தூக்க மாத்திரைகள் மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தனது தந்தை காந்திக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த காந்தி, உடனடியாக மகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரேச்சல், ஜூன் 8-ஆம் தேதி மருத்துவரின் அனுமதியின்றி வீடு திரும்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 13-ஆம் தேதி முதல் சான் ரேச்சலுக்குக் கை, கால், முகம் போன்ற பகுதிகளில் திடீரென வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மூலக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜூன் 20-ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தந்தை காந்தி அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சான் ரேச்சலுக்குக் குடும்பப் பிரச்சனை மற்றும் கடன் பிரச்சனை ஆகியவை இருந்ததாகத் தெரியவந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
25 வயதான சான் ரேச்சல், சிறு வயதிலேயே புற்றுநோய் காரணமாகத் தாயை இழந்தவர். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த இவர், தொடக்கத்தில் தனது நிறத்தின் காரணமாகக் கேலிகளைச் சந்தித்தாலும், அதை ஒரு சவாலாக ஏற்று மாடலிங் துறையில் நுழைந்தார். பலருக்கு மாடலிங் பயிற்சி வகுப்புகளையும் அவர் எடுத்து வந்தார். 'மிஸ் இந்தியா' பட்டத்தை வெல்வதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்தார். தனது தன்னம்பிக்கை மற்றும் போராட்ட குணத்தால் பலருக்கும் உத்வேகமாகத் திகழ்ந்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications