புதுச்சேரி முன்னாள் எம்.பி கண்ணன் காலமானார் - முதல்வர் ரங்கசாமி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: முன்னாள் சபாநாயகரும் முன்னாள் எம்.பியுமான கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. கண்ணன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவுக்கு முதல்வர் என். ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர், எம்பி என பதவிகள் வகித்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இரண்டு முறை புதிய கட்சிகள் துவங்கினார். 2016ம் ஆண்டு தேர்தலின் போது அதிமுகவுக்கு சென்றார். அதன்பிறகு, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பாஜகவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என சொல்ல அக்கட்சியில் இருந்து கண்ணன் விலகினார்.

Puducherry EX MP Kannan passes away Chief Minister N. Rangaswamy mourns

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் கண்ணன் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு மருத்துவரிடம் விசாரித்தார்.

இந்த சூழலில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டவர் கண்ணன்.

Puducherry EX MP Kannan passes away Chief Minister N. Rangaswamy mourns

முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும், எம்.பி.யுமான கண்ணன், நிமோனியாவால் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:51 மணி அளவில் காலமானார். இதனை அவர் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நுரையீரல் நோய் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணன் மகன் விக்னேஷ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 1ம் தேதி ரத்த அழுத்த குறைவு மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தந்தை அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். மேலும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு சுவாசத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணன் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+