புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபாஷ் தமிழிசை.. ஒரே வீடியோ.. மொத்தம் 18 லாரி டிரைவர்கள்.. நள்ளிரவு 1 மணிக்கு அதிரடி.. என்ன நடந்தது?

18 லாரி டிரைவர்களை காஷ்மீர் பனியில் இருந்து தமிழிசை மீட்டுள்ளார்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: 15 நாட்களாக சாப்பாடு இல்லாமல், காஷ்மீர் பனியில் சிக்கி தவித்துள்ளனர் 18 தமிழக லாரி டிரைவர்கள்.. அவர்களை பத்திரமாக மீட்டுள்ளார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்தது.

இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கடும் பனிப்பொழிவினால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்துகள் பாதிப்படைந்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியை தனது கட்சியில் இணையச் சொன்ன இஸ்ரேல் பிரதமர்! காங்கிரஸ் கொடுத்த பதிலை பாருங்க பிரதமர் நரேந்திர மோடியை தனது கட்சியில் இணையச் சொன்ன இஸ்ரேல் பிரதமர்! காங்கிரஸ் கொடுத்த பதிலை பாருங்க

 தமிழகம்

தமிழகம்

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 18 லாரி டிரைவர்கள் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பணி நிமித்தமாக சென்றுள்ளனர்.. ஆனால், அங்கு சிக்கி உணவு கூட இல்லாமல் தவித்துள்ளனர்.. கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கும் மேலாக இவர்கள் பனியில் மாட்டிக் கொண்டு இன்னலில் உள்ளதாக வீடியோ ஒன்றும் வெளியானது. இந்த வீடியோ தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 தமிழிசை

தமிழிசை

இதையடுத்து, அவர்களை மீட்கும் முயற்சியில் தமிழிசை இறங்கினார்... இதற்காக தெலுங்கானா ஏடிசி துஷார் ஸ்ரீயிடம், தமிழக லாரி டிரைவர்கள் அங்கு சிக்கி இருக்கும் விஷயத்தை சொல்லி, உதவும்படி கேட்டுக் கொண்டார்.. அதன்பேரில் அவரும் ஜம்முவில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கவும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 அதிரடி

அதிரடி

அதிரடியாக நள்ளிரவு ஒரு மணிக்கு பாதுகாப்பு படையினர் லாரி டிரைவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சென்றனர்.. தமிழகத்தை சேர்ந்த 18 டிரைவர்களையும் மீட்டு ராணுவ முகாமுக்கு கொண்டு வந்தனர்... அவர்களுக்கு சாப்பாடு தந்தனர்.. முகாமிலேயே பிற வசதிகளையும் செய்து தந்து தங்க வைத்துள்ளனர்.. பத்திரமாக மீட்கப்பட்ட 18 பேரும் அங்கு சிரமமின்றி நிம்மதியாக இப்போது இருக்கிறார்கள்.

வீடியோ

வீடியோ

இவர்கள் எல்லாம் கடந்த 12-ம் தேதி பாலக்காட்டில் இருந்து காஷ்மீருக்கு கேபிள் ஏற்றி கொண்டு போனவர்களாம்.. சாலைகள் எல்லாம் பனி உறைந்து கிடக்கவும், அவர்களால் அங்கிருந்து நகர முடியாமல் தவித்துள்ளனர்.. கொண்டு போன சாப்பாடும் தீர்ந்துவிட்ட நிலையில் பட்டினியாகவே இருந்துள்ளனர்.

உதவி

உதவி

அதற்கு பிறகுதான் ஒரு வீடியோ எடுத்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.. அந்த வீடியோ உதவியால்தான் 18 பேரையும் தமிழிசையால் மீட்க முடிந்துள்ளது.. இப்போதைக்கு அங்கு பனி உறைந்து நிலைமை சீராக சில மாதங்கள் ஆகுமாம்..அதுவரை அங்குதான் லாரி டிரைவர்கள் தங்கியிருப்பார்கள் என்று தெரிகிறது.

English summary
18 lorry drivers from Tamil Nadu have gone to Srinagar, Kashmir for work. The video was brought to the attention of Telangana Governor Dr. Tamilisai Saundarajan, who has taken rescue action.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X