புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரி அரசை விமர்சிக்க உரிமை இருக்கு.. ஆனால் ஒற்றுமையா இருக்கோம் - பாஜக அமைச்சர் நமச்சிவாயம்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்வதாக பேச்சு அடிபட்ட நிலையில் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என பாஜகவை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனின் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினமே தமிழிசை பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ், திமுக கட்சியினர் நிதீஷ் குமார் நிலை ரங்கசாமிக்கு வரும் என்று தெரிவித்தனர்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியோ, "புதுச்சேரியின் சூப்பர் முதலமைச்சராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும், முதலமைச்சர்களாக அனைத்து அமைச்சர்களும் உள்ளார்கள்." என்று குற்றம்சாட்டினார்.

பாருங்க.. இலவச வீடு திட்டத்திற்கு காமராஜர் பெயரை நீக்கிய புதுச்சேரி அரசு! திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு பாருங்க.. இலவச வீடு திட்டத்திற்கு காமராஜர் பெயரை நீக்கிய புதுச்சேரி அரசு! திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு

சுயேட்சைக்கள்

சுயேட்சைக்கள்

இந்த நிலையில் நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன், "எனக்கு தெரியாமலேயே என்னுடைய தொகுதியில் கோயில் கமிட்டி, பால் கூட்டுறவு சங்கங்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கிறார்கள். நான் பாஜகவை ஆதரிக்கிறேன் என்பதால் அரசு இப்படி செய்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

 பாஜக எம்.எல்.ஏ

பாஜக எம்.எல்.ஏ

மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாஸும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பின்ன சட்டசபையில் பேசிய பாஜக எம்.எம்.ஏ கல்யாணசுந்தரம், "அறநிலையத்துறை எம்.எல்.ஏக்களின் ஆலோசனையை கேட்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதே விதிமுறை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இதை பின்பற்றுகிறார்கள். ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் இதை கடைபிடிக்கவில்லை. பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் என்பதற்காக பழிவாங்குகிறார்களா என்பதை இங்கேயே சொல்லிவிடுங்கள்.

முதல்வராக்கியதே..

முதல்வராக்கியதே..

நாங்கள் கையெழுத்து போட்டே முதல்வராக்கியுள்ளோம். எங்களுக்கு இந்த ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக, பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி சபாநாயகர், உள்துறை அமைச்சர் தொகுதியிலும் இதேநிலைதான். பிரதமர் நிதி ஒதுக்கவில்லை. நிதி ஆணையத்தில் சேர்க்கவில்லை என்று சொல்கிறார்கள். நாம் இங்கு கூட்டணி அரசை ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால், பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன." என்றார்.

நமச்சிவாயம் விளக்கம்

நமச்சிவாயம் விளக்கம்

கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜக எம்.எல்.ஏக்களே சட்டசபையில் அரசுக்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளது ஆளும் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அம்மாநில பாஜகவை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் எவ்வித பிளவும் கிடையாது. உறுப்பினர்கள் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன்வைக்க உரிமை உள்ளது." என்றார்.

English summary
There no clash in Puducherry NR Congress, BJP alliance - Namachivayam: ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்வதாக பேச்சு அடிபட்ட நிலையில் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என பாஜகவை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X