வேட்டிய மடிச்சு கட்டுனா நானும்.. எச்.ராஜாவின் புதிய அவதாரம்! வெள்ளையும் சொல்லையுமா செய்த சம்பவம்!
புதுக்கோட்டை: பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கபடி போட்டியில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்று விளையாடி உள்ளார். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடினர். இவரது பிறந்த நாளை பாஜக சார்பாக விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 2 வாரங்கள் சேவை வாரமாக கொண்டாட பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்த இரண்டு வாரங்களில் விழிப்புணர்வு பேரணிகள், மாரத்தான் போட்டிகள், நலத்திட்ட உதவிகள் என பாஜக சார்பாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. அதேபோல் தமிழக பாஜக சார்பாக மாரத்தான் போட்டி, கபடி போட்டி, மாட்டு வண்டி போட்டி என பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாஜக சார்பாக கபடி போட்டி
அதேபோல் மாவட்டந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக மாவட்ட பாஜக சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட பாஜக சார்பாக கபடி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

எச்.ராஜா பங்கேற்பு
இந்த கபடி போட்டி தொடக்க விழாவில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கலந்துகொண்டார். இன்று மாலை தொடங்கிய கபடி போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர்.

ரெய்டராக களமிறங்கிய எச்.ராஜா
இந்த நிலையில் கபடி போட்டி தொடங்குவதற்கு முன், பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா, புதுக்கோட்டை மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் வேட்டியை மடித்துக் கொண்டு கபடி விளையாடினார். ரெய்டராக களமிறங்கிய எச்.ராஜாவை, எதிரில் நின்ற பாஜக நிர்வாகி பிடிக்க முயல, அவரிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பித்து எச்.ராஜா எல்லைக் கோட்டை தொட்டார். இதன்பின்னர் உற்சாகமடைந்த பாஜக நிர்வாகிகள், எச்.ராஜாவை தூக்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

எச்.ராஜா ட்விட்டர் பதிவு
இதனைத்தொடர்ந்து எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு மிகவும் பிடித்தது கோட்டை தாண்டி தொட்டு பி(அ)டிப்பதே! புதுக்கோட்டையில் பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டதிலும் விளையாண்டதிலும் மட்டற்ற மகிழ்ச்சி. ஏற்பாடு செய்த புதுக்கோட்டை மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications