Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உடலுறவு".. சார் கேவலமா பேசறாரு.. தோழியிடம் விம்மிய மாணவி.. அடுத்த ஆடியோ லீக்.. இது புதுக்கோட்டையில்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார் புதுக்கோட்டை ஆசிரியர் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: மாணவி ஒருவரை, அதே கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர், செல்போனில் ஆபாசமாக பேசி, உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்.. இதுகுறித்த ஆடியோ ஒன்று வெளியாகி, அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் கிளப்பி விட்டு வருகிறது.

நாகையில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரி விவகாரத்தின் பரபரப்பே இன்னும் அடங்கவில்லை.. அந்த காலேஜில் உடற்கூறுவியல் ஆசிரியராக பணிபுரியும் சதீஷ், மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை தந்திருந்தார்.

ஒரு புகார் குறித்து விசாரிப்பதற்காக, நேரில் வர வேண்டும் என்று அந்த மாணவிக்கு போன் செய்துள்ளார் சதீஷ்.. அந்த மாணவியோ, நான் நாளைக்கு காலேஜ் வருகிறேன் சார், இன்று மாதவிலக்கு, வலி அதிகமாக இருக்கிறது என்று கெஞ்சி உள்ளார்.

பீரியட்ஸ்

பீரியட்ஸ்

அதற்கு சதீஷ், பரவாயில்லை, நான் பார்த்துக்கறேன், இப்பவே கிளம்பி என் வீட்டுக்கு வா என்று சொல்லி அழைத்துள்ளார்.. இந்த ஆடியோ, கலெக்டர் அருண்தம்புராஜ் உட்பட கல்வித்துறை அதிகாரிகளுக்கு பறந்தது.. அக்கல்லூரி மாணவ - மாணவிகளிடமும் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. அந்த கல்லூரியின் தாளாளர் கார்த்திகேயன், பாஜக மாவட்ட தலைவர் ஆவார்.. உடனடியாக சதீஷை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.. மறுநாளே சதீஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.. இது தொடர்பான விசாரணை ஒருபக்கம் நடந்துவந்தாலும், மாணவியிடம் சதீஷ் பேசிய ஆடியோ, இணையத்தில் வெளியாகி, பொதுமக்களுக்கு கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

பயிரை மேய்ந்த வேலி

பயிரை மேய்ந்த வேலி

இந்நிலையில், இதுபோலவே இன்னொரு சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.. அங்கும் வேலியே, பயிரை மேய்ந்துள்ளது.. புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில், மாணவி ஒருவர் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்... இவர், அதே காலேஜில் படிக்கும் ஒரு மாணவரை காதலிக்கிறார்.. இதனிடையே, இந்த மாணவியை, அதே காலேஜில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர், செல்போனில் ஆபாசமாக பேசி பசி உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்... இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தன் குடும்பத்தில் இதை பற்றி சொல்லி அழுதுள்ளார்..

நொறுங்கிடுச்சே பைக்

நொறுங்கிடுச்சே பைக்

உடனே மாணவியின் உறவினர்கள் சிலர், கல்லூரிக்கு சென்று சம்மந்தப்பட்ட பேராசிரியரின் பைக்கை சரமாரியாக அடித்து நொறுக்கினர்... போராட்டத்திலும் இறங்கினர்.. ஆனால், அவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை அந்த பேராசிரியர் மீது எடுக்கப்படும் என்று நம்பிக்கை தந்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த இந்திய மாணவர் சங்கத்தினர், கணேஷ் நகர் போலீஸில் புகார் தந்தனர்.. அந்த பேராசிரியர், பல மாணவிகளிடம் இப்படித்தான் தவறாக பேசியிருக்கிறார்..

லீக் ஆடியோ

லீக் ஆடியோ

அதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கேட்டுக் கொண்டிருந்தனர்.. இந்த புகாரின் அடிப்படையில் போலீசும் விசாரணை நடத்தி வருகின்றனர்... இதைதவிர, பேராசிரியர்கள் கொண்ட குழுவும், இதை பற்றி தனியாக விசாரித்து வருகிறது... இப்படிப்பட்ட சூழலில், சம்பந்தப்பட்ட மாணவியிடம் பேராசிரியர் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.. அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவி, தன்னுடைய சக தோழியிடம் செல்போனில் பேசிய ஆடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ பேச்சு இதுதான்:

மாணவி: "எல்லோருக்கும் உடலுறவில் ஆசை இருக்கும்... எனக்கும் ஆசை இருக்கு.. நீ என்னை எவ்ளோ வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கோ.. ஆனால், என்னை விட அவன்கிட்ட (காதலன் பெயரை சொல்கிறார்) என்ன இருக்கு? அவன் காசு தரேன்னானா? புள்ளய குடுத்துட்டு ஏமாத்திருவான்.. நான் உனக்கு எல்லாமே பண்ணுவேன்னு" என்கிட்ட சொல்றாருடி.

தோழி: என்னா பண்ணுவானா?

மாணவி: கேவலமாக பாக்கிறாரு... கேவலமா பேசுறாரு... சுருதிக்கிட்ட பேசும்போது (இன்னொரு மாணவி) கழுத்துக்கு கீழே தான் பாத்து பேசினாரு" என்று அந்த ஆடியோ நீள்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+