புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்இடி டிவிக்குள் "சிறுநீர்.." பல்லி செய்த சம்பவத்தால்.. தலையில் துண்டை போட்ட புதுக்கோட்டை விவசாயி

டிவி நிறுவனத்தில் இருந்து வந்த மெக்கானிக், தொலைக்காட்சிக்குள் பல்லி சென்று சிறுநீர், எச்சம் கழித்ததால் டிஸ்பிளே போய்விட்டதாகக் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: எல்இடி டிவிக்குள் புகுந்து பல்லி சிறுநீர் கழித்ததால் புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி ரூ.40 ஆயிரத்தை மொத்தமாக இழந்திருக்கிறார்.

சரியாக வாரண்ட்டி முடிவடைந்த சில நாட்களிலேயே பல்லி தனது வேலையை காட்டியதால், தங்களால் டிவியை மாற்றி தர முடியாது என ஷோரூம் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் மனம் நொந்துபோன விவசாயி, எல்இடி டிவிக்குள் பல்லி செல்லாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என யூடியூபில் வீடியோ போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு எடுத்து வருகிறார்.

 ரூ.40 ஆயிரம் எல்இடி டிவி

ரூ.40 ஆயிரம் எல்இடி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த நாயக்கர்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். விவசாயியான இவர் தனது வீட்டில் பல வருடங்களாகப் பழைய மாடல் டிவியையே வைத்திருந்தார். பின்னர், மனைவி மற்றும் பிள்ளைகளின் வலியுறுத்தலின் பேரில், கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எல்இடி டிவி ஒன்றை அங்குள்ள ஒரு ஷோரூமில் இருந்து ரூ.40 ஆயிரம் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

 பழுதான டிவி

பழுதான டிவி

அந்த புதிய டிவிக்கு 2 ஆண்டுகள் வாரண்ட்டி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வாரண்ட்டி முடிந்த 3 மாதங்களில் திடீரென அந்த டிவி சிறிது சிறிதாகப் பழுதாகத் தொடங்கியது. முதலில் டிஸ்பிளேயில் வருவது இரண்டு இரண்டாகத் தெரிந்து, பின்னர் சிறிது சிறிதாக ஒன்றுமே தெரியாமல் போயுள்ளது. இதையடுத்து, டிவி நிறுவனத்தின் கஸ்டமர் கேருக்கு போன் செய்து புகார் அளித்துள்ளார் விஜயகுமார்.

 சிறுநீர் கழித்த பல்லி

சிறுநீர் கழித்த பல்லி

இதனைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் இருந்து வந்த டிவி மெக்கானிக், தொலைக்காட்சிக்குள் பல்லி சென்று சிறுநீர், எச்சம் கழித்ததால் டிஸ்பிளே போய்விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், இதைச் சரிசெய்ய நிறையப் பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், வாரண்ட்டி முடிவடைந்ததால் இலவசமாக பழுதுபார்க்க முடியாது என்றும் ஷோரூம் ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், டிவிக்குள் பல்லி செல்லாதவாறு கவர் செய்து வைக்க வேண்டியது உங்கள் கடமை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 மனம் நொந்து வீடியோ

மனம் நொந்து வீடியோ

இதனால் சிறுக சிறுக சேமித்து வைத்த ரூ.40 ஆயிரம் பணம் மொத்தமாகப் போனதை எண்ணி மனம் நொந்த விவசாயி விஜயகுமார், தனக்கு நேர்ந்ததை போல மற்றவர்களுக்கும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தற்போது எல்இடி டிவிக்குள் பல்லி புகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், பல்லியை வீட்டில் இருந்து விரட்டுவது எப்படி என்பன போன்ற வீடியோக்களை யூடியூபில் பதிவிட்டு வருகிறார்.

English summary
A farmer from Pudukottai has lost a total of Rs.40 thousand after a lizard entered and urinated inside the LED TV.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X