3 வேளையும் சோறு+ ஊறுகாய்! புதுக்கோட்டை சமூகநீதி விடுதியில் அவலம்! மாணவிகள் போராட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் தங்கி படிக்கும் சமூகநீதி விடுதியில் மூன்று வேளையும் சாதம், ஊறுகாய் மட்டுமே உணவாக வழங்குவதாக கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள சமூக நீதி விடுதியில் மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த விடுதியில் மாணவிகளுக்கு 3 வேளையும் சாதமும் ஊறுகாயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாம்பார், ரசம், கார குழம்பு என எதுவுமே வழங்காமல் வெறும் ஊறுகாயை, சாதத்தில் பிசைந்து சாப்பிடும் நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதை கண்டித்து தங்களுக்கு வழங்கப்பட்ட உணவுடன் மாணவிகள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அது போல் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் பிரவீனா மேரியும் நேரில் சென்றிருந்தார்.
அப்போது மாணவிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விடுதி வார்டன் சுபேதாவிடம், வட்டாட்சியர் பிரவீனா மேரி கேட்ட போது சமைப்பதற்கு மளிகை பொருட்கள் வரவில்லை. இதனால் தேவையான உணவை அவர்களுக்கு வழங்க முடியவில்லை என்றார்.
இதையடுத்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிரவீனா மேரி, விடுதி வார்டனை கடிந்து கொண்டார். "மளிகை பொருட்கள் வரவில்லை என்றால் சொல்ல மாட்டீர்களா, உங்கள் பிள்ளைகளாக இருந்தால் இப்படித்தான் ரோட்டில் உட்கார வைப்பீர்களா" என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications