ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"முடியை இழுத்து.. நெருங்கி வந்த கை?" சசிகலா புஷ்பாவிற்கு நடந்தது என்ன? சர்ச்சையில் பாஜக நிர்வாகி

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாஜகவை சேர்ந்தவரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா அவமதிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தியாகி இம்மானுவேல் சேகரன் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவில்பட்டியில் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவேந்திர குல வேளாளர் பிரிவை சேர்ந்த இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் தென் மண்டலத்தில் முக்கியமான ஒன்றாகும்.

வெறுத்துப் போய்ட்டாங்க.. யார் வேணும்னு மக்கள்ட கேளுங்க! இன்னொரு கேஸ் இருக்கு.. சேலத்தில் சசிகலா! வெறுத்துப் போய்ட்டாங்க.. யார் வேணும்னு மக்கள்ட கேளுங்க! இன்னொரு கேஸ் இருக்கு.. சேலத்தில் சசிகலா!

அஞ்சலி

அஞ்சலி

இந்த நிலையில் நினைவு நாளின் போது, பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த தலைவர் என்பதால், அரசியல் ரீதியாக இமானுவேல் சேகரன் நினைவு நாள் மிகவும் முக்கியமானது ஆகும். திமுக சார்பாக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் போன்றவர்கள் நினைவிடத்தில் மரியாதையை செய்தனர். பாஜக சார்பாகவும் பல நிர்வாகிகள் நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

இந்த நிலையில் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாஜகவை சேர்ந்தவரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா மரியாதையை செலுத்தினார். அப்போது நடந்த சம்பவம்தான் இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது. அவர் அங்கு மரியாதை செய்த போது அப்போது அவரை சுற்றி ஆண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அப்போது பின்னால் இருந்து ஒரு கை அவரின் முடியை பிடித்து இழுத்தது. இதனால் வலியில் முகத்தை சுளித்த சசிகலா புஷ்பா முன்னால் நகர்ந்து வந்தார்.

 பாஜக நிர்வாகி

பாஜக நிர்வாகி

அப்போது அவருக்கு பின்னால் பாஜக மூத்த நிர்வாகி பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி உள்ளே வந்தார். அவர் சசிகலா புஷ்பாவை இடித்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதோடு சசிகலா புஷ்பாவின் கையை அவர் பிடிக்க முயன்றதாகவும், கையை வைத்து சசிகலா புஷ்பாவை தொடும்படி சென்றதாகவும் கூறப்படுகிறது. அவரின் கையை சசிகலா புஷ்பா அடுத்தடுத்து தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.

வீடியோ சர்ச்சை

வீடியோ சர்ச்சை

திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதோடு பாஜக நிர்வாகி மீதும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஆனால் பாஜக தரப்பில் இதை பற்றி விசாரித்ததில், அப்படி சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அன்று கூட்டமாக இருந்தது. அவ்வளவுதான். வீடியோவில்தான் தவறாக தெரிகிறது. மற்றபடி கூட்டம் காரணமாக நிர்வாகிகள் முண்டியடித்துக்கொண்டு அருகருகே நின்றனர், மற்றபடி ஒன்றும் இல்லை, என்று விளக்கம் அளித்துள்ளனர்.

English summary
Did a BJP leader try to assault Sasikala Pushpa? What happened on Immanuel Sekaran anniversary?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X