ஐய்யனார் கோயிலுக்குதானே.. நான் தாரேன்! 23 செண்ட் இடத்தை இலவசமாக கொடுத்த கீழக்கரை முஸ்லிம் விவசாயி
ராமநாதபுரம்: ஐய்யனார் கோயிலுக்கு செல்லும் பாதைக்காக தன்னுடைய 8 செண்ட் நிலத்தை இந்துக்களுக்காக இலவசமாக வழங்கிய இஸ்லாமியரின் மதநல்லிணக்கம் அனைவரையும் வியக்க வைத்து வருகிறது.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ஒன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை. பொதுவாகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாமியர்களும் இந்து மக்களும் மாமன் மச்சான் என்று உறவு முறை வைத்து அழைப்பது வழக்கம்.
தத்தமதி மத பண்டிகை காலங்களில் மதம் கடந்து அனைவரும் ஒன்றாக உணவு, பரிசு, வாழ்த்துக்களை பரிமாறி ஒன்றாக கொண்டாடும் வழக்கம் உடையவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த மக்கள்.

கீழக்கரை இஸ்லாமியர்
இந்த மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது கீழக்கரையை சேர்ந்த இஸ்லாமியரின் செயல். ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரங்குடி மேல வலைசை கிராமத்தில் பொன்னு சிறையெடுத்த ஐய்யனார் கோயில் அமைந்து இருக்கிறது. இந்த கோயிலுக்கு செல்ல முறையான பாதை இல்லாமல் இருந்து இருக்கிறது.

ஐய்யனார் கோயில்
இதனால் கிராம மக்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்து உள்ளனர். இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மஞ்சு விரட்டு போட்டியும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கோயிலுக்கு செல்ல ஒரே வழி அதன் ஒரே இருக்கும் நஞ்சை நிலம் மட்டும்தான். ஆனால், அந்த நிலம் கீழக்கரையை சேந்த முஹம்மது சுவைபு என்ற 75 வயது விவசாயிக்கு சொந்தமானது.

கோயிலுக்கு இஸ்லாமியர் நிலம் தானம்
இந்த நிலையில் முஹம்மது சுவைபை சந்தித்த கிராம மக்கள் கோயில் பாதைக்காக தங்களுக்கு நிலம் வழங்குமாறு கோரி இருக்கிறார்கள். கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் நிலையை உணர்ந்த முஹம்மது சுவைபு ஐய்யனார் கோயில் பாதைக்காக தன்னுடைய 8 செண்ட் நஞ்சை நிலத்தையும் தானமாக வழங்குவதாக அறிவித்தார்.

மக்களுக்காக நிலம் தானம்
இதனை கேட்ட கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள், முஹம்மது சுவைபின் மதநல்லிணக்கத்தை கண்டு வியந்தனர். அதுமட்டுமின்றி பொதுமக்களுக்காக வேறொரு இடத்தில் தன்னுடைய 15 செண்ட் நிலத்தையும் முஹம்மது சுவைபு தானம் செய்து இருப்பதாகவும் அவரால் பயனடைந்த மக்கள் கூறி வியக்கின்றனர்.

15 செண்ட் நிலம் தானம்
ஆம், காஞ்சிரங்குடி பக்கீரப்பா தர்காவில் இருந்து கிழக்கு முத்தரைய நகருக்கு செல்ல பாதை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் கடலோரமாக நடந்து சென்று வந்து உள்ளனர். அந்த பகுதியிலும் முஹம்மது சுவைபுக்கு சொந்தமான 15 செண்ட் நிலம் இருந்து இருக்கிறது. கிராம மக்கள் படும் சிரமத்தை அறிந்த முஹம்மது சுவைபு அந்த நிலத்தையும் தானமாக வழங்கி இருக்கிறார்.

ஒற்றுமையாக வாழ அறிவுரை
இதுகுறித்து பேசிய முஹம்மது சுவைபு, "மக்கள் தற்போது சிரமம் இன்றி ஐய்யனார் கோயிலுக்கு சென்று வருவதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இனி வரக்கூடிய சந்ததியினராவது இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்ற மத பாகுபாடுகள் இன்றி மத நல்லிணக்கத்துடனுடம் ஒற்றுமையோடும் வாழ வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார்.

நாட்டில் மத பதற்றம்
நாட்டில் அரசியல், பொருளாதார காரணத்துக்காக பல பகுதிகளில் மதக் பிரச்சனைகள் தூண்டிவிடப்பட்டு கலவரங்களும், உயிர் பலிகளும், கும்பல் படுகொலைகளும், வழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. இதனால் உத்தரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் மத பதற்றங்கள் நீடிக்கின்றன.

எடுத்துக்காட்டாக இருக்கும் தமிழ்நாடு
இந்த நிலையில் கோயிலுக்காகவும், பொதுமக்களுக்காகவும் மதம் கடந்து மனித நேயத்துடன் 23 செண்ட் நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம் விவசாயி முஹம்மது சுவைபுவின் செயல், தமிழ்நாடு எப்போது மதநல்லணக்கத்தின் தலைநகரம் என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவாக நிரூபித்து இருக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications