’அம்மா’ இருந்திருந்தால் இப்படி நடக்குமா? மாஜிக்களை கொம்பு சீவி விடும் ஓபிஎஸ் டீம்! கடுப்பான எடப்பாடி!
இராமநாதபுரம் : பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என கூறி வரும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் தரப்பில் இருக்கும் சில நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனையடுத்து ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அவர்களை தொடர்பு கொண்டு தூபம் போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் மாவட்டங்களில் அக்டோபர் மாதம் வந்தாலே பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. தேவர் குருபூஜை மருது சகோதரர்கள் விழா என தென்மாவட்டங்களில் திருவிழா கோலம் பூண்டு விடும்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் திருமகனார் என அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவானது அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

தேவர் ஜெயந்தி
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் கூட்டம் என இரண்டு நாட்களும் பசும்பொன் கிராமமே களை கட்டி காணப்படும். திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி அந்த கட்சியின் பிரதான தலைவர்கள் அனைவரும் நிச்சயம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள். தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கும் நிலையில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் அங்கு வந்திருக்கிறார்.

படையெடுக்கும் அரசியல் புள்ளிகள்
இதேபோல தமிழக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். அஞ்சலி நிகழ்ச்சி என்பதை தாண்டி அப்பகுதி மக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கடவுள் போலவே பார்க்கின்றனர். விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து அவரை தரிசிப்பதும் வழக்கம்.

எடப்பாடி பழனிச்சாமி
அந்த வகையில் வருகின்ற 30ஆம் தேதி தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்து சமுதாயத்தினர் இடையே எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி எழுந்துள்ளது. இதனால் அவர் அணியில் உள்ள அமைச்சர்களே சோர்வடைந்துள்ள நிலையில் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முக்குலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய விழாக்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

முக்குலத்தை புறக்கணிக்கிறாரா?
கொங்கு மண்டலத்தையும் வடமாவட்டங்களை மட்டுமே நம்பி அவர் அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவிலிருந்து ஓரம் கட்டியது எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தியை அதிகமாக்கிய நிலையில் தற்போது மேலும் அதிகரித்து இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். குறிப்பாக அதிமுக சார்பில் தங்க கவசத்தை தேவர் சிலைக்கு அணிவித்தது முக்குலத்து சமுதாய மக்களிடையே அதிமுகவில் செல்வாக்கை பெருக்கியது.

ஓபிஎஸ் கோஷ்டி
மேலும் முக்குலத்தின் நிர்வாகிகளுக்கு அவர் அமைச்சர் பதவிகளையும் கட்சிப் பதவிகளையும் வழங்கியதால் தற்போது வரை பலரும் அதிமுக விசுவாசிகளாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் எடப்பாடி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் தரப்பில் இருக்கும் அமைச்சர்களே சோர்வடைந்துள்ள நிலையில் அவர்களை தொடர்பு கொண்டு ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மேலும் வெறுப்பேற்றி வருகின்றனர். ஓபிஎஸ் முக்குலத்து நிர்வாகிகளை அரவணைத்துச் செல்வார். ஆனால் எடப்பாடியை பார்த்தீர்களா புறக்கணிக்கிறார் என கூறி வருகின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா எனவும் அவர்கள் தூபம் போட்டு வரும் நிலையில் சற்று யோசித்து வருகிறார்களாம் எடப்பாடி அணி நிர்வாகிகள். இதன் காரணமாகவே ஆர்பி உதயகுமார் மிரட்டப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
-
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய்












Click it and Unblock the Notifications