ரூ.25 லட்சம் கோடி.. பாலைவனத்தில் வீடுகள்! அடையாளம் தெரியாமல் மாறப்போகும் சவூதி - அறிவியலா? ஆபத்தா?
ரியாத்: சவுதி அரேபியா எப்போதும் புதுமையான கட்டுமானங்களுக்கு பெயர் பெற்றது. அந்த வகையில் இந்நாட்டின் நகரத்தில் கட்டுமானங்களை உருவாக்கி வரும் 'நியோம்' எனும் நிறுவனம் தற்போது மற்று புதிய முற்றிலும் மாறுபட்ட கட்டுமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது சுமார் 170 கி.மீ தொலைவிற்கு மனிதர்களுக்கான கட்டுமானத்தை உருவாக்கவே இந்நிறுவனம் முயன்று வருகிறது. இது முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பங்களுடன் இருக்கும்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று மற்றும் குரங்கு அம்மை தொற்று உள்ளிட்டவைகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும் இவற்றிற்கு நம்மால் இவற்றை குணப்படுத்த மருந்துகளை கண்டுபிடித்து விட முடியும். ஆனால் மனித இனத்திற்கு உண்மையான அச்சுறுத்தலாக இருப்பது என்பது, காற்று மாசுதான். உலக அளவில் இந்த மாசு காரணமாக சுமார் 90 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
இதில் இந்தியாதான் முதல் இடம். ஆனால் இது வெறும் காற்று மாசை மட்டும் சார்ந்த செய்தியல்ல. இவ்வாறு வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து உமிழப்படும் மாசு புவியின் வெப்பத்தை அதிகரித்து இயற்கை பேரிடர்களை உருவாக்கவும் வழிவகை செய்கிறது. சமீபத்தில் உலக நாடுகள் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் 2060க்குள் பூமியில் வெளியேற்றப்படும் கார்பன் கழிவுகளின் சதவிகிதத்தை பூஜ்யமாக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான சிறப்பான ஒரு கற்பனை திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பாலைவனம்
சவுதி அரேபியாவில் உள்ள பாலைவன மற்றும் மலைத் தொடர்களுக்கு நடுவே மனிதர்கள் வசிப்பதற்கு குடியிருப்புகளை ஏற்படுத்துவத இந்த கற்பனை திட்டம் சிந்தித்துள்ளது. கேட்பதற்கு சற்று முட்டாள்தனமாக இது இருக்கலாம். ஆனால் யாருக்கு தெரியும் இதுவே கூட எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு வரலாம். இந்த திட்டத்தின்படி, கண்ணாடியால் மூடப்பட்ட வானளாவிய கட்டிடங்கள் 100 மைல்களுக்கு மேல் பாலைவனம் மற்றும் மலை நிலப்பரப்பில் கட்டப்படும். இதில் சுமார் 90 லட்சம் மக்கள் வரை வசிக்க முடியும். யோசித்து பாரக்கவே தலை சுற்றுகிறதா?
Recommended Video

கற்பனைத் திட்டம்
இந்த திட்டதை சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை திட்டம் என்று அழைப்பதை விட இது ஒரு யோசனை என்றுதான் கூற வேண்டும். இந்த யோசனைக்கான ஒரு கற்பனை கட்டுமான வரைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமானதாக இல்லையென்றாலும் அனைவரது கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. சவுதி அரேபியாவின் அகபா வளைகுடாவிற்கு அருகிலுள்ள பகுதியில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

குடியிருப்பு
சவுதி அரேபியாவில் கட்டமைப்பு வசதிகளை செய்து வரும் 'நியோம்' எனும் நிறுவனம் இது தொடர்பான வீடியோவை தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு திட்டத்தின்படி, 100 மைல்களுக்கு உருவாக்கப்பட இருக்கும் இந்த கட்டங்கள் 500 மீட்டர் உயரம், 200 மீட்டர் அகலமான அமைப்பை கொண்டு இருக்கும். மேலும் இதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயனிக்க கார்களை பயன்படுத்த வேண்டியதில்லை. இதன் காரணமாக கரியமில வாயு உமிழ்வை தவிர்க்க முடியும். ரயில் சேவை மட்டுமே இருக்கும். மேலும் 5 நிமிடங்களில் நம்மால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அந்த வகையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்படும்.

சந்தேகம்
இந்த மாதிரியான கட்டமைப்புகள் பழமையானவற்றிலிருந்து மனிதர்களை பிரித்துவிடும் என சிலர் எச்சரித்துள்ளனர். ஆனால் இதுதான் எதிர்காலமாக இருக்கும் என்று பலர் கூறத் தொடங்கியுள்ளனர். 2030ம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள 'நியோமின்' கற்பனை திட்டத்தின் முதல் பகுதிக்கு சுமார் ரூ.25 லட்சம் கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அரசு சார்பில் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்கள் சார்பில் முதலீடு செய்யப்பட்டால்தான் பணியை விரைந்து முடிக்க முடியும் என சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் இது தொடர்பாக சில செலவினங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த செலவீனங்கள் பெருமளவு கைகொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த திட்டத்தின் மீதான சந்தேகம் வலுவடைந்துள்ளது.
இந்த திட்டம் குறித்து இரு வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கையில், முதல் கட்டம் முடிக்கப்படும் நிலையில்தான் இது வெற்றியா தோல்வியா எனத் தெரியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications