போச்சே.. ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதலால் எங்க பாடு திண்டாட்டம்.. கதறும் அதிமுக தொண்டர்கள்- இன்னும் 2நாள் தான்?
சேலம் : உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையோடு முடிவடைந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் பலர் சுயேட்சை வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
Recommended Video
ஜூலை 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 34 கட்சி அடிப்படையிலான பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், அதிமுக இரட்டைத் தலைமை மோதலால் வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமை கையெழுத்திட்ட படிவம் கிடைக்கவில்லை.
இன்னும் இரண்டு நாட்களில் கட்சி சின்னத்தில் போட்டியிட தலைமை அங்கீகாரம் வழங்கும் படிவத்தை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நிறைவடைய இருப்பதால் அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இடைத்தேர்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

கட்சி சின்னம்
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

யார் அங்கீகாரம் தருவது
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் மோதலால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்த நிலையில் இந்தப் படிவங்களில் யார் கையெழுத்து போடுவார்கள் என்ற சர்ச்சை எழுந்து. இந்த ஏ மற்றும் பி படிவங்களை வேட்பு மனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஜூன் 30ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சுயேட்சையாக
வேட்பு மனுத் தாக்கல் நேற்று மாலை 5 மணியோடு நிறைவடைந்த நிலையில், கடைசி வரை வேட்பாளர் பட்டியலே அதிமுக தலைமையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அந்தந்தப் பகுதியினரே முடிவு செய்து தங்கள் கட்சி சார்பில் சிலரை களமிறக்கியுள்ளனர். அவர்களும், கட்சித் தலைமையின் படிவம் இல்லாத காரணத்தால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒன்றிய கவுன்சிலர்
எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் முருகன் என்பவரும், அமமுக சார்பில் லோகநாதன் என்பவரும், பாமக சார்பில் சகாதேவன் என்பவரும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில், அதிமுக கிளை செயலாளர் வெங்கடேஷ் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் கட்சித் தலைமை படிவத்தை அளித்தால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

வேட்பாளர்கள் கலக்கம்
அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30ஆம் தேதிக்குள் கட்சித் தலைமையின் கையெழுத்தைப் பெற்று சமர்பிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரட்டைத் தலைமை சிக்கல் இப்போதைக்கு தீராது எனும் சூழலில், இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது. இதனால், உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.

வெற்றி வாய்ப்பு பறிபோகும்
இரட்டை இலை சின்னம் அனைவரும் நன்கு அறிமுகமானது என்பதால் அந்த சின்னத்தில் போட்டியிட்டால் வாக்குகளை எளிதாக கவர முடியும். ஆனால், கட்சி சின்னம் இல்லாமல் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் ஏதோவொரு சின்னத்தில் போட்டியிட்டால் கட்சித் தொண்டர்களின் வாக்குகளைக் கூடப் பெற முடியாது என்றும், தலைமையின் மோதல் போக்கால் அடிமட்டத் தொண்டர்கள் பாதிக்கப்படுவதாகவும் வேட்பாளர்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications