"8 வழிச்சாலை" அதிமுக ஆட்சியென்றால் தவறு.. திமுக ஆட்சியென்றால் சரியா? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
சேலம்: அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, தற்போது 8 வழிச்சாலை வேண்டும் என்கிறார்கள். 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்த போது, நிலம் மற்றும் அதில் உள்ள மரங்களுக்கு தனித்தனியாக இழப்பீடு அறிவித்தோம். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தால் தவறு, தற்போது கொண்டு வந்தால் சரியா?என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியில் இருந்து விலகிய ஏராளமான நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்தனர். சேலத்தில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2023ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கமே சிறப்பாக இருக்கப் போவதற்கான அறிகுறி போல் அமைந்துள்ளது. 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியை அடைந்தது.

சேலம் வளர்ச்சி பற்றி இபிஎஸ்
அதேபோல் சேலம் மாவட்டமும் வேகமாக வளர்ச்சியடைந்தது. அதற்கு அமைச்சராக இருந்த நான், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் ஒரு காரணம். சேலத்தில் என்ன பிரச்சினை என்று அறிந்ததால், உடனடியாக தீர்வு காண முடிந்தது. இன்று சேலம் மாவட்டம் தமிழ்நாட்டில் வேகமாக முன்னேறி வரும் மாவட்டங்களில் ஒன்று.

திமுகவின் நிலைப்பாடு
போக்குவரத்து நெரிசல் இல்லாத சூழல் இருக்க வேண்டும் என்பதற்காக, அதிக பாலங்களை கட்டினோம். குடிநீர் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தோம். சேலத்தில் சட்டக் கல்லூரியை கொண்டு அதிமுக வந்தது. ஆனால் திமுக திறந்து வைக்கப் போகிறது. அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலையை திமுகவினர் எதிர்த்தனர். ஆனால் தற்போது அமைச்சர் எ.வ.வேலு வேண்டும் என்கிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தால் தவறு, தற்போது கொண்டு வந்தால் சரி என்கிறார்கள்.

8 வழிச்சாலை
உலகத்தரத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசிடம் போராடி திட்டத்தை கொண்டு வந்தோம். நில அளவீடுகள் எல்லாம் செய்த பின், பணிகளை தொடங்க இருந்தோம். ஏக்கருக்கு நான்கு மடங்கு உயர்த்தி மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றோம். நிலம் மற்றும் அதில் உள்ள மரங்களுக்கு தனித்தனியாக இழப்பீடு அறிவித்தோம். வீடுக்கு தனியாக இழப்பீடு அறிவித்தோம்.

திராவிட மாடல்
சாலைகளை இருந்தால் மட்டுமே வேலைவாய்ப்பு, தொழிற்சாலை உள்ளிட்ட வளர்ச்சிகளை உருவாக்க முடியும். அன்றைக்கு திமுக மொத்தமாக போராட்டம் நடத்தியது. கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுக்கு ஜால்ரா அடித்தன. ஆனால் வேண்டுமென்றே விவசாயிகளை தூண்டிவிட்டு, திட்டத்தை கெடுத்துவிட்டார்கள். இப்போது மீண்டும் திமுக ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல்.

அதிமுக திட்டங்கள் முடக்கம்
திமுக ஆட்சிக்கு வந்த 20 மாதங்கள் கடந்துவிட்டது. இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இந்திய அளவில் சேலம் மாவட்டம் மிகமுக்கிய மாவட்டமாக இருந்திருக்கும். ஆனால் அதிமுக கொண்டு வந்த அற்புதமாக திட்டங்களை முடக்கிவிட்டார்கள். அம்மா மினி கிளினிக் திட்டம், விவசாயிகளுக்கான திட்டம் என அனைத்தையும் முடக்கிவிட்டார்கள் என்று விமர்சித்தார்.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச்












Click it and Unblock the Notifications