சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கால் கடைகளில் அதிகரிக்கும் கூட்டம்.. கொரோனா பரவ வாய்ப்பு

Google Oneindia Tamil News

சேலம்: தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

Recommended Video

    தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கால் கடைகளில் அதிகரிக்கும் கூட்டம்.. கொரோனா பரவ வாய்ப்பு - வீடியோ

    ஞாயிறு முழு ஊரடங்கு, என்று இருந்த நிலையில், நோய் தொற்று பரவும் அபாயத்தால் இன்று முதல் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை, மளிகைக்கடை, டீக்கடை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்படவும் 12 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை என உத்தரவிட்டது. இன்று முதல் தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த கட்டுப்பாட்டு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

    Coronavirus infection is increasing in Tamil Nadu due to partial lockdown

    சேலம் மாவட்டத்தில், நோய்தொற்று நாளுக்கு நாள் அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டு வருகிறது. நாளொன்றுக்கு 600 பேருக்கு தொற்று பரவியுள்ளது. நோய்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கேரளாவில் கொரோனா பரவல் அதிதீவிரம் - முழு ஊரடங்கை அறிவித்த முதல்வர் பினராயி விஜயன்கேரளாவில் கொரோனா பரவல் அதிதீவிரம் - முழு ஊரடங்கை அறிவித்த முதல்வர் பினராயி விஜயன்

    இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் செயல்படும் மளிகை கடை, பூக்கடை காய்கறி கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்கி முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    Coronavirus infection is increasing in Tamil Nadu due to partial lockdown

    மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் முக கவசம் இன்றி சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூடும் இடத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    இதுகுறித்து பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் கூறும்போது, தற்பொழுது அரசானது புதிய கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. ஆனால், மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஏற்கனவே சேலத்தில் நோய்த்தொற்று அதிகரித்துள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    coronavirus infection is increasing day by day in Tamil Nadu. Thus the government is taking various control measures including lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X