சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஷ்பு இட்லி கேள்விப்பட்டிருப்பீங்க.. சேலத்தில் பிரபலமாகும் மோடி இட்லி!.. வைரலாகும் புகைப்படங்கள்

Google Oneindia Tamil News

சேலம்: ரூ 10க்கு 4 இட்லிகள் என சேலத்தில் பிரதமர் மோடி பெயரில் இட்லி விற்பனைக்கான விளம்பர அறிவிப்புகள் வைரலாகி வருகிறது.

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதற்கு விளம்பரம் என்பது நிச்சயம் தேவை. இது போன்ற விளம்பரங்கள் புகழ்பெற்ற சினிமா நடிகையின் பெயர் சேலைகளுக்கு வழங்கப்படும். தற்போது கொரோனா காலத்திலும் புடவைக்கு கொரோனா புடவை என பெயர் வைக்கப்பட்டது.

அது போல் தென்னிந்திய உணவான இட்லிக்கு குஷ்பு இட்லி என்று பெயர் வைக்கப்பட்டு அது இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

நாங்க சும்மா தனியா நின்னாலே.. 60 சீட் கிடைக்குமே.. எல். முருகன் பலே பேச்சு! நாங்க சும்மா தனியா நின்னாலே.. 60 சீட் கிடைக்குமே.. எல். முருகன் பலே பேச்சு!

ரூ 10க்கு 4 இட்லிகள்

ரூ 10க்கு 4 இட்லிகள்

இந்த நிலையில் மோடி இட்லி என்பதற்கான விளம்பர போஸ்டர் சேலம் நகர் வீதி, சின்னக் கடை வீதி, பழைய பேருந்து நிலையம், செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. பாஜகவின் பிரசார அணியின் மாநில துணைத் தலைவர் மகேஷ் பெயரில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. ரூ 10-க்கு நான்கு இட்லி அதுவும் சாம்பாருடன் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரம்

சுகாதாரம்

ஆரோக்கியமானது, சுகாதாரமானது, சுவையானது, தரமானது, அதி நவீன கருவிகள் கொண்டு இட்லி தயார் செய்யப்படுவதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு சேலம் செல்லுவோருக்கு இந்த மோடி இட்லி விருப்பமான உணவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வெற்றி

வெற்றி

இந்த கடைகள் தொடக்கத்தில் 22 திறக்கப்படும். இந்த கடைகளின் வெற்றி, இட்லியின் விற்பனை, மக்களின் ஆதரவு, கடையின் பிரபலம் உள்ளிட்டவைகளை வைத்து மேலும் கடைகள் திறக்கப்படும் என பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 40ஆயிரம் இட்லி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம்

அடுத்த வாரம்

இதற்கான இயந்திரம் அடுத்த வாரத்தில் சேலத்திற்கு வரும் என தெரிகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டம் சேலம் ஆகும். அத்துடன் சேலத்து மாம்பழம் என்பதை போல் இனி மோடி இட்லியும் சேலத்திற்கு ஒரு அடையாளத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Modi Idli's posters pasted in Salem to attract publicity by a senior BJP activist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X