சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுபான பாரில் தகராறு.. இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற ரவுடி.. சேலத்தில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் ரவுடி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன்(40). தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்த இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

One died after a rowdy stabbed to death in Salem

இந்த நிலையில் ஆனந்தாபாலம் அருகே உள்ள மதுபான கடையில் நேற்று இரவு தனது நண்பரான அகமது உசேன் மற்றும் சீனிவாசன் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

இவர்களுக்கு அருகில் மற்றொரு தரப்பினரான மேட்டுத் தெருவைச் சேர்ந்த மோகன் அவரது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் மோகன் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பாக கிருபாகரனின் நண்பர் ஒருவர் மனைவியுடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஏற்கெனவே பிரச்சினை இருந்து வந்த நிலையில் இதுதொடர்பாக மது அருந்திக் கொண்டிருந்த போது இருதரப்பு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி தகராறாக மாறிய நிலையில் மோகன், அவரது நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் பீர்பாட்டிலை உடைத்து கிருபாகரன், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கொரோனா சித்ரவதையை அனுபவிக்காதீர்.. வைரஸ் பாதித்த கரூர் டிஎஸ்பியின் உருக்கமான வீடியோ!கொரோனா சித்ரவதையை அனுபவிக்காதீர்.. வைரஸ் பாதித்த கரூர் டிஎஸ்பியின் உருக்கமான வீடியோ!

மேலும் மோகன் தான் வைத்திருந்த கத்தியால் கிருபாகரனை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் கிருபாகரன், சீனிவாசன் மற்றும் தகராற்றை தடுக்க வந்த அம்ஜத் ஆகியோர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.

தகராறு நடைபெற்ற இடத்திற்கு விரைந்த டவுன் காவல்நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று கிருபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு முக்கிய குற்றவாளியான மோகன் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியொலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
War of words between two teams while drinking alcohol, one team stabbed to death another team, one died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X