செல்விக்கு எதுக்கு இந்த வேலை.. இப்போ மாட்டிக் கொண்டு முழிக்கிறார்!
இரண்டு குழந்தைகளை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சேலம்: செல்விக்கு எதுக்கு இந்த வேலை? தெருவில் விளையாடிட்டு இருக்கிற 2 சின்ன பசங்களை கடத்த முயற்சி செய்திருக்கிறார்!
சேலம் ஜங்ஷன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்-மகாலட்சுமி தம்பதி. இவர்களுக்கு நித்யா என்ற 9 வயது பெண்ணும், சரவணன் என்ற 3 வயது ஆண் குழந்தையும் இருக்கிறார்கள்.

இப்போது ஸ்கூல் லீவு என்பதால், வீட்டின் முன்புறம் உள்ள தெருவில் இருவரும் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 30 வயசுடைய பெண் ஒருவர் வந்தார். அவர் பெயர்தான் செல்வி!
விளையாடி கொண்டிருந்த 2 குழந்தைகளை பார்த்தார்.. கொஞ்சநேரத்தில் இருவரையும் தன்னோடுஅழைத்து கொண்டு போனார். தெருவில் விளையாடும் குழந்தைகள் சத்தம் கேட்காததால், பெற்றோர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது குழந்தைகளை காணவில்லை. இதனால் பதறியடித்து கொண்டு தேடினர். அவர்களுடன் அப்பகுதி மக்களும் குழந்தைகளை தேடினர்.

அப்போது, பொன்னம்மாபேட்டை பகுதியில் செல்வி இரு குழந்தைகளுடன் சென்று கொண்டிப்பதை பார்த்தனர். விரட்டி சென்று செல்வியை பொதுமக்கள் மடக்கி பிடித்து கடுமையாக தாக்கினர். உடனடியாக அஸ்தம்பட்டி போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் செல்வியை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த செல்வி யார், இதற்கு முன்பு இப்படி குழந்தைகளை கடத்தி இருக்கிறாரா? வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என்ற விசாரணை ஆரம்பமாகி உள்ளது.

-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications