குடி போதையில் தாறுமாறாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக்... இளைஞர்கள் படுகாயம் - 4 பேர் கைது
சேலம்: சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் விபத்தை ஏற்படுத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். குடிபோதையில் காரை ஓட
சேலம்: சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
Recommended Video
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் காளிகவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் தாறுமாறாக ஓடிய கருப்பு நிற கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காட்சி வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைப்பை ஏற்படுத்தியது.

தூக்கி வீசப்பட்ட பைக்
கார் மோதிய வேகத்தில் முன்னாள் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். பைக் மேலே பறந்து விழுந்தது. இதில் ஹெல்மெட் அணிந்திருந்த நபர் லேசான காயங்களுடன் தப்பினார். பின்னால் அமர்ந்திருந்த நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வைரல் வீடியோ
பின்னால் வந்த காரில் இருந்த வீடியோ கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து தகவலறிந்த மகுடஞ்சாவடி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய காரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.

அதிரடி கைது
இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சதீஷ்குமார், கார் உரிமையாளர் வினோத் மற்றும் உடன் பயணித்த கௌதம்ராஜ், அருண்குமார் ஆகிய 4 பேரை சேலம் தனிப்படை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

போதை ஆசாமிகள் கைது
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் எஸ்பி ஸ்ரீ அபினவ், 4 பேரும் குடி போதையில், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், சாலை விபத்துக்களை தடுக்க குடிபோதையில் யாரும் வாகனங்களை இயக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

வேகத்தை கண்டறிய கருவிகள்
குடிபோதையில் வாகனங்களை இயக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார். மேலும் சேலத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய தானியங்கி கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எஸ்.பி. ஸ்ரீ அபினவ் தெரிவித்துள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications