சேலம் தலைவாசல் விஏஓவுக்கு ஒரே நாளில் தலையெழுத்தே மாறியது.. நிலத்தை அளக்க இதெல்லாம் தேவை இல்லை
சேலம்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையத்தை சேர்ந்த கண்ணையன் என்பவர் தனது நிலத்தை அளப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அவரிடம் காமக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் அவரது கிராம உதவியாளர் வேல்முருகன் நிலத்தை அளக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த புகாரில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) மற்றும் உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
அரசு அலுவலகங்களில் சில அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. வருவாய்துறை அலுவலங்களில் புகார்கள் இன்னமும் அதிகமாகவே இருக்கிறது. நிலத்தை அளக்க வரும் சில சர்வேயர்கள், விஏஓக்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன .

ஆனால் வருவாய்துறை உள்பட எந்ததுறையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்க முடியும். ஆதாரத்துடன் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயணம் தடவிய நோட்டுகளை தருவார்கள். அதன்பின்னர் யார் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பணத்தை தர வேண்டும்.
அப்படி பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக விஏஓ, சர்வேயர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுவதுடன், அவருக்கு அது பணிக்காலம் முழுவதும் கறையாக தொடரும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்படி சிக்கல்கள் இருந்தும் லஞ்சம் வாங்குவதை சில அரசு ஊழியர்கள் தொடருகிறார்கள்.
சேலம் தலைவாசல் அருகே நிலத்தை அளவீடு செய்ய ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள காமக்காபாளையத்தை சேர்ந்தவர் கண்ணையன். தனது நிலத்தை அளப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபு (30), உதவியாளர் வேல்முருகன் (44). ஆகியோர் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கண்ணையன் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். இதன் பேரில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்ணையனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ. 10,000 ரொக்கத்தை கொடுத்து அனுப்பினர். இதனை விஏஓ பிரபு மற்றும் உதவியாளர் வேல்முருகன் ஆகியோரிடம் கண்ணையன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாகபிடித்தனர். லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications