• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

குடி போதையில் கொலை செய்து காவிரியில் சடலத்தை வீசிய ஏற்காடு சரவணன்... காரணம் காசு தான்

|

சேலம்: சாராயம் குடித்து விட்டு வெட்டியாக ஊர் சுற்றுவதற்கு பதிலாக ஏதாவது வேலை வெட்டிக்கு போகலாமே என்று அட்வைஸ் செய்தவர்களை கல்லைத் தூக்கிப் போட்டு கொன்று ஆற்றில் வீசியிருக்கிறார் சரவணன் என்ற வாலிபர். சேலம் ஏற்காடு அருகே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே சரவணன்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கொலைகளை செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது மனநிலையை போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.

ஏற்காடு குண்டூர் தெப்பக்காட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு வயதான ஆண் பெண் சடலங்கள் கிடந்தன. போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பெரியான் என்றும் அவரது பெரியப்பா மகள் வெள்ளையம்மாள் என்பதும் தெரியவந்தது. இந்த இருவரையும் கொன்றது அதே ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சரவணன் என்பது தெரியவந்தது.

Salem Yercaud double murder case accused Saravanan police arrest

சம்பவம் நடந்த மே 7ஆம் தேதி தெப்பக்காடு பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார் பெரியான். அப்போது அங்கே விறகு சேகரிக்க வந்தார் வெள்ளையம்மாள். அதே நேரத்தில் குடி போதையில் அங்கு வந்த சரவணன், குடிக்க பணம் கேட்டு பெரியானை தொந்தரவு செய்திருக்கிறான். குடித்து விட்டு ஊர் சுற்றுவதற்கு பதிலாக ஏதாவது வேலை வெட்டிக்குப் போகலாமே என்று அட்வைஸ் செய்துள்ளனர். போதையில் இருந்த சரவணன் அங்கே இருந்த கல்லை தூக்கிப்போட்டு வயதான இருவரையும் கொன்று விட்டு தலைமறைவாகி விட்டான்.

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இதுவரை 5000 கிலோ குப்பைகள் அகற்றம்.. நேபாள ராணுவம் கடும் உழைப்பு

கொலையாளி சரவணனை அள்ளிக்கொண்டு வந்த காவல்துறையினர் விசாரித்த போது, குடிக்க பணம் கேட்ட போது கொடுக்காமல் அட்வைஸ் செய்ததால் அடித்துக்கொன்று விட்டதாக அசால்ட்டாக கூறினான். அதற்கடுத்து சரவணன் கூறியதுதான் அதிர்ச்சி ரகமாக இருந்தது. இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே என்று கூறினார் காவல்துறையினர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த சரவணன் தனது நண்பர்கள் தெப்பக்காடு சரவணன், ஜெயபாலுடன் வேலை தேடி திருவாரூர் சென்ற போது அங்கே நடந்த தகராறில் ஜெயபாலை கொன்று ஆற்றில் வீசிவிட்டான். அந்த கொலையை வைத்து மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்த ஜெயபாலையும் போட்டு தள்ளிவிட்டு எதுவும் நடக்கதது போல ஊர் சுற்றி வந்துள்ளான். அந்த கொலைகள் பற்றி புகார் எதுவும் தரவில்லை என்பதால் தப்பித்து வந்த சரவணனை சிக்க வைத்து விட்டது இரட்டை கொலைகள். சரவணன் நல்ல மனநிலையில் இருக்கிறானா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனராம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The accused Saravanan, in an inebriated state, appears to be mentally unsound said a police source, The victims were Periyaan, 60, who was grazing cattle in that area and his elder cousin sister, Vellaiammal, 65, who was collecting firewood for her kitchen when Saravanan dwelt a murderous blow on both of them with a big stone, police said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more