சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க 'சிஎம்' கனவு ஒருபோதும் பலிக்காது.. தேர்தலுக்கு பிறகு பாருங்க ஸ்டாலின்.. எடப்பாடி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

சேலம்: திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருபோது நிறைவேறாது என சேலத்தில் நடந்த பிரச்சாரக்கூடத்தில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வெல்பவர்களே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பார்கள் என்பதால் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

குறிப்பாக முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இடையே முதல்வர் பதவி விவகாரத்தில் கடும் மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. நேற்று ஸ்டாலின் பேசுகையில், இந்த தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தானாக விலக்குவார் என கூறியிருந்தார்.

எல்லோரும் எனக்கே ஓட்டுப் போடுங்க.. இல்லாட்டி பாவம் வந்துரும்ய்யா.. பாஜக எம்.பி சாபம்!எல்லோரும் எனக்கே ஓட்டுப் போடுங்க.. இல்லாட்டி பாவம் வந்துரும்ய்யா.. பாஜக எம்.பி சாபம்!

முதல்வர் பிரச்சாரம்

முதல்வர் பிரச்சாரம்

இந்நிலையில் சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, பாமக நிறுவனர் ராமதாஸ், உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கற்றனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசினார்.

முதல்வராக முடியாது

முதல்வராக முடியாது

அப்போது அவர் பேசியதாவது: "நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கு (மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு) பிறகே தனது அரசியல் வாழ்க்கை தொடங்கும். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒருபோதும் பலிக்காது, ஏற்கனவே ஸ்டாலின் கண்ட கனவு எல்லாம் கானல்நீர் ஆகிப்போனது. ராமதாஸ் குறிப்பிட்டது போல், ஸ்டாலினின் முதல்வர் கனவு எந்த காலத்திலும் பலிக்காது.

லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

ஆட்சியை கவிழ்க்க

ஆட்சியை கவிழ்க்க

நீங்கள் போட்ட திட்டம் அத்தனையையும் தவிடு பொடி ஆக்கிவிட்டோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உடைக்க வேண்டும் என்று எண்ணிணீர்கள். அதுவும் முடியவில்லை. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள், அதுவும் முடியவில்லை.

முதல்வர் நம்பிக்கை

முதல்வர் நம்பிக்கை

இப்போது தேர்தல் வந்திருக்கிறது. மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், இந்த இரண்டிலுமே 100க்கு 100 சதவீதம் வெற்றி பெறும் எங்கள் கூட்டணி. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெல்லும். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்" இவ்வாறு முதல்வர் பழனிச்சாமி பேசினார்.

English summary
cm edappadi palanisamy says Stalin's Chief Minister's dream will not succeed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X