பெரியாரின் பிம்பத்தை உடைக்க முடியாது.. நாட்டில் தீமைகளை சொல்லவே 'பல' அமைப்புகள்! வைரமுத்து சுளீர்!
சேலம்: சமூக ஊடக வளர்ச்சி என்னை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது எனவும், சமூக ஊடகங்களில் பேசுவதன் மூலம் பெரியாரின், அண்ணாவின், கலைஞரின் பிம்பத்தை யாராலும் உடைக்க முடியாது என சேலம் மாவட்ட வெற்றித் தமிழர் பேரவை தொடக்க விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வெற்றித் தமிழர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பிரபல எழுத்தாளரும், பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு பேரவையை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில், சான்றிதழ்களையும், சிறந்த சமூக சேவையாளர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கவிஞர் வைரமுத்து,” சமூக ஊடகங்களின் வளர்ச்சி தன்னை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி இருப்பதாகவும், சமூக ஊடகங்களால் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிம்பங்களை உடைக்க முடியாது என்றார். நாட்டில் தீமைகளை சொல்லவே பல்வேறு அமைப்புகளும் இயக்கங்களும் உள்ளன. ஆனால் இவர்களுக்கு நடுவே நாட்டின் நன்மைகளை சொல்ல வெற்றி தமிழர் பேரவை உள்ளது.
முதலில் இந்த பேரவைக்கு தமிழர் வெற்றி பேரவை என பெயர் வைக்கலாமா என நினைத்தேன். அதைத்தான் சற்று பெயரை மாற்றி இயக்கமாக தொடங்கியுள்ளனர். பரவாயில்லை அவர்கள் வளரட்டும். உடலில் கண்கள் மட்டும்தான் பொய் பேசாது; கண்ணோடு கண் பார்த்து பேசுங்கள். ஆனால் தற்போது செவியோடு செவி கேட்டு பேசுவதுதான் அதிகரித்துள்ளது. சின்ன சின்ன தோல்விகளால் வாழ்க்கை செதுக்கப்படுகிறது.
தமிழன் முன்னேற வேண்டும் என்பதே இந்த பேரவையின் நோக்கம். வெற்றி தமிழர் பேரவையில் உள்ள அனைவரும் மது குடிப்பதில்லை. இதனால்தான் பேரவையில் உறுப்பினர்கள் குறைவாக உள்ளது. கிராமத்தில் 50 வயதுக்கு மேல் யாருக்கும் ஆயுள் இல்லை. தலை நரைத்து போகும் முன்னே குடியால் இறந்து போகிறார்கள். மூத்த குடிமக்கள் இல்லாத ஊர் தலையில்லா முண்டம் போல. எனவே குடியிலிருந்து அனைவரையும் மீட்டெடுக்க வேண்டும்.
உடலில் கண்கள் மட்டும்தான் பொய் பேசாது, கண்ணோடு கண் பார்த்து பேசுங்கள். ஆனால் தற்போது செவியோடு செவி கேட்டு பேசுவதுதான் அதிகரித்துள்ளது. சின்ன சின்ன தோல்விகளால் வாழ்க்கை செதுக்கப்படுகிறது. தமிழன் முன்னேற வேண்டும் என்பதே இந்த பேரவையின் நோக்கம்” என்றார். இந்த நிகழ்ச்சியில் வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகள், எழுத்தாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications